பகுதி 26
வழமைபோல் தன் அலுவலகம் செல்லத் தயாராகியவன், மாடியில் இருந்து கீழே வந்து மைதிலியைத் தேடினான். அவள் இல்லை என்றதும், விஜயா அறையினில் தான் இருப்பாள் என நினைத்து, விஜயாவினை காணச் செல்ல, அங்கு விஜயாவும் இல்லை என்றதும் வெளியே வந்தான்.
பூஜை அறையில் நின்ற ஈஸ்வரியிடம் வந்தவன், பூஜ முடியும் வரை...