• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Malar Bala

    விதி 2

    அத்தியாயம் 2 அன்று நாள் முழுவதும் அக்கம்பக்கத்தினரும், சில முக்கியமான விருந்தினர்களும் மட்டும் வந்து சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் இருக்கும் விருந்தினர்களும் திருமணத்திற்காக வந்து தங்கியவர்களும் விடைபெற்றுச் சென்று கொண்டிருந்தனர். அனைவரையும் உபசரித்தே அந்த நாளும் ஓடி விட ஆழியன் மட்டும்...
  2. Malar Bala

    விதி 1

    அத்தியாயம் 1 அதிகாலை பொழுது. சூரியன் தன் கதிர் கரங்களை மெல்லியதாக விரிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். பல சொந்தங்கள் கூடியிருக்க, மிகவும் அழகான அலங்காரத்தில் அந்த மண்டபம் ஜொலித்து கொண்டிருந்தது. ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டதை போல மணமக்கள் அந்த மேடையில் வீற்றிருந்தனர். வந்த...
  3. Malar Bala

    யார் அவனோ?

    நின்னை நின் பெயரை அறியா பேதை தான் இவள்! நின் முகம் கண்டதில்லை! நின் குரல் கேட்டதில்லை! நின் முகவரியும் அறிந்ததில்லை! ஆனாலும் மனதின் ஓரத்தில் ஓர் உணர்வு! பல யுகங்களாய் நாம் ஒன்றாய் ஒருவருக்குள் ஒருவர் வாழ்ந்ததைப் போல்.. நின்னை நினைக்காத நாட்களென்று எதுவும் கடந்ததில்லை! நின் நிழலினை தாங்கிடும்...
  4. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 14

    அத்தியாயம் 14 சிறு வயதில் இருந்தே ரம்யாவை பார்ப்பதால் ஆதிரைக்கு அவளை பற்றி நன்றாகவே தெரியும். பொதுவாகவே எங்கு என்ன தப்பு நடந்தாலும் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதனால்தான் சட்டப் பாதிப்பையே அவள் எடுத்ததும் கூட. இதில் அவளது உயிர் தோழிக்கு ஒருவன் இவ்வளவு பெரிய தவறை செய்துள்ளான் என்றால் அதை...
  5. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 13

    அத்தியாயம் 13 ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா “நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான். ராமும் “அது...
  6. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 12

    அத்தியாயம் 12 தேவாவிடம் இருந்து விலகிவிட ஆதிரை முயற்சி செய்யவும் தேவா அவன் பிடியை இன்னும் இறுக்கி ஆதிரையின் காதுகளில் “என்ன ஆதிரை? என்ன ஆகிற்று?” என்றான். “ஒ... ஒன்றுமில்லை..” என்றவள் அதற்கு மேல் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கை விட்டாள். எப்படியும் விலகுவது என்பது...
  7. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 11

    அத்தியாயம் 11 மீனாட்சி மிகவும் பரபரப்பாக இருந்தார். மதியம் உணவு என்ன? யார் முதலில் செல்கிறீர்கள் போலப் பல கேள்விகளைச் சதாசிவத்திடமும் தேவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார். அவர்களது பேச்சு புரியாமல் ஆதிரை ராமைப் பார்க்கவும் ராம் “என்ன ஆதிரை? அவர்கள் பேசுவதை அப்படிப் பார்க்கிறாயே?” என்று...
  8. Malar Bala

    மாய கண்ணன்

    மாய கண்ணன்... பல காலங்களாக அன்பிற்கு ஏங்கியவளை கண்டு கடவுளே இறங்கி வந்தானோ! அவன் கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு தனியகராதி உண்டோ? தன் பின்பக்காட்டியில் என்னைக் காணும்பொழுது பின்னால் நின்று இரசிப்பவன் அவனே... இருபது ஆண்டுகளாய் என்னுடன் இருந்த மனதுடன் சேர்த்து... நானாய் உண்ணும்...
  9. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 10

    அத்தியாயம் 10 பொறுமையாக என்று சதாசிவம் கூறவுமே ஆதிரை இவர் ஏதோ பெரிதாகக் கூறப்போகிறாரோ என்று எண்ணினாள். அவரும் அதற்கேற்ப தொடர்ந்து “ஆதிரை நான் வீட்டில் இல்லை என்பதற்கான காரணத்தை உன்னிடமிருந்து மறைக்க காரணம் நீ அதைத் தவறாக எடுத்துக் கொள்வாயோ என்ற பயம் தானம்மா.” என்றவரை இடைமறித்து “நான் ஏன்...
  10. Malar Bala

    அவனது அவள்

    அவனைப் பற்றி நானறிந்த சில.. செய்யும் வேலைகளைப் பாராட்டுபவன் தான் ஆகினும் அவனருகில் நான் செய்தால் ஏனென்ற கேள்வியுடன் நின்று தடுப்பான்.. அதிகம் கோபம் கொள்ளும் பழக்கமுடையவனே ஆகினும் நான் அதிகப்பிரசங்கி யாகவே செய்தாலும் சிரித்து நகர்கின்றான் ஏனோ.. தன் காதலின் உணர்வை அவன் வார்த்தைகள்...
  11. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 9

    அத்தியாயம் 9 நீண்ட நேரமாக ஆதிரை அறையிலிருந்து எந்தவித சத்தமும் இல்லாமல் வீட்டில் அனைவரின் முகத்திலும் பயம் குடிகொண்டிருந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறாளோ என்ற பதற்றம் அங்கு நின்றவர்கள் மட்டுமின்றி அந்த வீட்டின் வேலை ஆட்களிடமும் தெரிந்தது. என்னதான் ஆதிரை வந்த புதிதில்...
  12. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 8

    அத்தியாயம் 8 தன் எதிரில் தீவிர சிந்தனையில் நின்று கொண்டிருந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கயலால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவனது துன்பத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனது துன்பம் பொறுக்காமல் கயல் தேவாவிடம், “இப்படி அனைவரும் கஷ்டப் படுவதற்குப் பதிலாக ஆதிரையிடம் அனைத்து உண்மைகளையும்...
  13. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 7

    அத்தியாயம் 7 ஆதிரையின் கோபம் அதிகரிப்பதைப் போலவே அடுத்தடுத்த நிகழ்வுகளும் வரிசையாக நடந்தேறின. கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவள் காரின் சத்தம் கேட்டு, தன் அறையின் கதவுகள் வழியே எட்டிப் பார்த்தாள். அங்கே காரிலிருந்து ஒரு ஜோடி இறங்குவதைப் பார்த்ததும் ‘தேவாவின் அண்ணனும் அண்ணியும் வந்து...
  14. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 6

    அத்தியாயம் 6 தேவா எதுவும் கூறாமல் பின் நோக்கி நடக்கவும் ஆதிரையும் இரண்டடி முன் நோக்கி நடந்தவள் அவர்கள் வீட்டைத் தாண்டியதும் இருந்த தென்னந்தோப்பை முதன் முதலாகப் பார்த்தாள். கண்கள் எட்டும் தூரம்வரை தென்னை மரங்களே இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அத்தனை...
  15. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 5

    அத்தியாயம் 5 மல்லிகாவிற்குத் தேவாவின் மீது இருந்த நம்பிக்கை பார்க்க ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே போல் தான் அவர்கள் திருமணத்தன்று அங்குக் கூடியிருந்த மக்களும் சிலர் கூறியதும் ஆதிரையின் நினைவிற்கு வந்தது. அதற்காக அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை. எனவே மல்லிகாவிடம் “ஏன் உங்கள் தேவ்...
  16. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 4

    அத்தியாயம் 4 இரவு நடந்த நிகழ்வுகள் மீனாட்சியம்மாளுக்கு சிறிது நம்பிக்கையை அளித்தாலும் உண்மைகள் அனைத்தும் தெரியும்பொழுது ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்கின்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் அதற்காக இப்போது என்ன செய்தாலும் அது எதிர்மறையாக மாறவும் வாய்ப்பு இருப்பதால் அவர் அமைதியாகவே இருந்தார்...
  17. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 3

    அத்தியாயம் 3 ஆதிரை ஒரு பக்கம் அந்த அறையை விட்டு வெளிவராமலும் உண்ணாமலும் இருந்தாள் என்றால் மறுபக்கம் தேவாவும் எதுவும் உண்ணவில்லை. மீனாட்சி அம்மாளுக்கும் நிலைமை புரியாமல் இல்லை. ஆனாலும் கூட மகனுக்கு ஆறுதல் கூறுவதா, மருமகளுக்குக் கூறுவதா எனக் குழம்பிப்போய் இருந்தார். அன்று இரவு அனைவரது மனதையுமே...
  18. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 2

    அத்தியாயம் 2 நீண்ட நேரமாகச் சிலைபோல் நின்றவளைப் பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே சிறிது பாவமாகத் தான் இருந்தது. அதைவிடவும் இவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்ற பயமும் ஏற்பட்டது. கடைசியில் ஆதிரையின் தாய் மங்களம் தான் அவளது இரு தோள்களையும் குலுக்கி, சத்தமாக “ஆதிமா... ஆதிமா... ஆதிரை! என்னைப்...
  19. Malar Bala

    காதலில் விதிகள் ஏதடி 1

    அத்தியாயம் 1 பொதுவாகப் புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற...