• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை - 20

அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வரும் தகவல் தெரிந்ததும் கார்த்திக் ரிஷிவர்மனுக்கு அழைத்து விட்டான்.

ரிஷிவர்மனின் ஃபோன் விடாமல் இசைத்தது.

சலிப்புடன் ஃபோனை எடுத்து பார்த்தவனோ கார்த்திக் அழைக்கவும், எடுத்து காதில் ஒற்றினான்.

" டேய் ரிஷி… ரிஷி… " என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்டான் கார்த்திக்.

" டேய் என்ன விஷயம்? எதுக்கு இப்போ என் பேரை ஏலம் விடுற?" கடுப்பு குறையாமல் வினவினான் ரிஷிவர்மன்.

" சாரி டா. கல்யாண கனவுல இருந்த உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா." என்று மன்னிப்பு வேண்டினான் கார்த்திக்.

" ப்ச்… அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. எதுக்கு கால் பண்ண? அதை சொல்லு."

" ஏன் டா? எதுவும் ப்ராப்ளமா?" என்று நண்பன் மேல் உள்ள அக்கறையில் மீண்டும், மீண்டும் துருவி வினவினான் கார்த்திக்.

" ப்ச்… டென்ஷனா இருக்குடா. மேனகாவுக்கு என் மேல சந்தேகம் வந்துருச்சுடா. சரின்னு கல்யாணம் பண்ணிட்டு வீட்ல இருன்னு சொன்னா, அவக் கேட்க மாட்டேங்குறா. வேலையை விட மாட்டேன்னு ஒத்தக் கால்ல நிக்குறா. வேலையை விட்டாதான் நம்ம கல்யாணம் நடக்கும்னு பிளாக்மெயில் பண்ணுனா, கல்யாணமே வேண்டாம்னுட்டா. நான் அவளுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? என்னையே வேண்டாம்னு சொல்லிட்டா. நான் இல்லாமல் அவளால இருக்க முடியுமா? ஆனால் என்னால முடியாது. பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு கார்த்திக்."

" சரி விடு டா. சிஸ்டர் எங்க போயிட போறாங்க? கொஞ்ச நாள் விட்டுப்பிடி."

" ம்… சரி டா. நீ எதுக்கு கால் பண்ண? ஏதாவது முக்கியமான விஷயமா? இல்லைன்னா கால் பண்ண மாட்டியே…"

" அப்படி ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லை. இருந்தாலும் உன் கிட்ட சொல்லுவோம்னு தான் கால் பண்ணேன். அவனுங்க கிளம்பிட்டாங்களாம். விடியற்காலை இங்கே வந்துடுவாங்க. சிஸ்டர் உன் கூட தானே இருக்காங்க." என.

" ம்… ஆமாம் இங்கே தான் இருக்கா. நான் காலைல ரூம்க்கு வந்ததோட சரி. இன்னும் வெளியே போகலை டா."

" டேய் ஃபூல். காலையிலிருந்து சாப்பிடாமலா இருக்க? போய் முதல்ல சாப்பிடு. அம்மாவும், அப்பாவும் வருத்தப்படப் போறாங்க. சிஸ்டரையும் சமாதானம் படுத்து. அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்.."

" ம்… சரி டா. பை…" என்று ஃபோனை வைத்த ரிஷிவர்மனின் வயிறும் இரைந்தது.

'காலையிலிருந்து பலமுறை கதவைத் தட்டிய அம்மாவை அலட்சியப்படுத்தியாயிற்று. இனி எங்க வரப் போறாங்க? இப்போ எப்படி வெளியே போறது.' என்று யோசித்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.

ஆனால் தனம் தாயல்லவா? மனது கேட்காமல் மீண்டும் வந்து கதவை தட்டினார்.

" டேய் ரிஷி. காலையிலிருந்து சாப்பிடாமலிருந்து ஏன் படுத்துற?என்ன தான் உன் பிரச்சினை? இப்போ வெளியே வர்றியா? இல்லையா?" பொறுமை மறைய கடிந்துக் கொண்டார் தனம்.

" ஏன் என்ன பிரச்சனைன்னு உங்களுக்குத் தெரியாதா? எல்லாம் உங்க மருமக தான் காரணம்." என்று படபடத்தவன், வேண்டா வெறுப்பாக வெளியே வந்தான்.

"டேய்… அவ என்னடா பண்ணா? வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டது தப்பா? அவ உணர்வுகளுக்கும் மதிப்புக் குடுடா."

"ம்கூம்… உங்க மருமகளை என்னைக்கு விட்டுக் குடுத்திருக்கீங்க. எங்க மேடம்… சாப்பிட்டாங்களா?" என்று அவள் அங்கே இல்லாததை கவனித்து வினவியவாறே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

" டேய் பையா… அவ மேல இவ்வளவு பாசத்தை வச்சுக்கிட்டு எதுக்குடா வம்பு பண்ற?"

"மா… கேட்டதுக்கு பதில் சொல்லுங்க."

" பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க. காலையிலிருந்து நானும், உங்க அப்பாவும் சாப்பிடாமல் உட்கார்ந்துட்டு இருக்கோம். நீ என்னன்னா, மேனகாவைப் பத்தி மட்டும் கவலைப்பட்டுட்டு இருக்க. இப்பவே இப்படின்னா, கல்யாணம் ஆகிடுச்சுன்னா அவ்வளவு தான். எங்களையெல்லாம் மறந்துடுவ போல." சற்று தாங்கலாக கூறினார் தனம்.

" என்னமா சொல்றே. நீயும், அப்பாவும் காலையிலிருந்து சாப்பிடலையா? அதைக் கூட கவனிக்காமல் என்ன பண்றா மேகி? வாங்க ரெண்டு பேரும், வந்து முதல்ல சாப்பிடுங்க." என்று இருவரையும் அமர வைத்து பறிமாறியவன், மீண்டும் பார்வையை அவளது அறையை நோக்கித் திருப்பினான்.

" டேய் அவ இங்கே இருந்தா இப்படி எங்களை கண்டுக்காமல் இருப்பாளா? அதுவும் உங்க அம்மா மாத்திரை போடலைன்னா உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பா." என்று ராமன் கூற.

" என்னப்பா சொல்றீங்க மேகி எங்க?"

"அவ காலையில வந்த கையோடவே கிளம்பி போயிட்டா." என்றார் தனம்.

"என்னம்மா சொல்றீங்க? என் கிட்ட ஏன் சொல்லலை. தனியாவா அனுப்புவாங்க." என்றவனது நெஞ்சோ படபடவென துடித்தது.

" டேய் இது என்ன புதுசா? இதுக்கு முன்னாடி அவ தனியா எங்கேயும் போனதே இல்லையா? வந்த புள்ள ஒரு வாய் சாப்பிடக் கூட இல்லாமல் கிளம்ப வச்சுட்டு, இப்ப வந்துட்ட அக்கறையா, சக்கரையா பேசிட்டு… முதல்ல சாப்பிடு…" என்ற தனம் சாப்பிட ஆரம்பித்தார்.

" மா… நீங்க சாப்பிடுங்க… ஒரு முக்கியமான கால் பண்ணனும். இதோ வரேன்." என்றவன், ஃபோனை எடுத்து கார்த்திக்குக்கு அழைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

" டேய் சாப்பிட்டு போய் பேசு." என்ற தனத்தின் குரலை உள்வாங்கவே இல்லை.

" என்னங்க… இவன் ஏன் இப்படி நடந்துக்குறான்." என்று வருத்தமாக வினவினார் தனம்.

" சரி விடு தனம். நீ சாப்பிட்டுட்டு அவனுக்கு தட்டுல போட்டுட்டு போய் குடு." என்றார் ராமன்.

"ம்… சரிங்க." என்ற தனம் வேக, வேகமாக இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு மகனுக்கு எடுத்துக் கொண்டு சென்றார்.

அதற்குள் ரிஷிவர்மனோ முகம் கழுவி விட்டு வந்து, மெத்தையில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

"ரிஷி…" என்று அழைத்தக் கொண்டு உள்ளே வந்த தனம், " என்னப்பா தேடுற?" என.

" பர்ஸ் எங்க வச்சேன்னு தெரியலை மா."

" இதோ ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல இருக்கு‌."

" ஓ… தேங்க்ஸ் மா." என்றவன் அதை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

" இந்தா ரிஷி." என்று இட்லியை பிட்டு ஊட்டினார்.

"தேங்க்ஸ் மா." என்றவன் வேக, வேகமாக வாங்கிக் கொண்டான்.

" இவ்வளவு பசியை வச்சுக்கிட்டு சாப்பிடாமல் இருக்க? உன்னை எல்லாம் என்ன பண்றது?" என்று அலுத்துக் கொண்ட தனம், ரிஷிவர்மன் கிளம்புவதை அப்போது தான் கவனித்தார்.
" ரிஷி எங்கேயும் வெளியே போறீயா?"

" ம்…நான் ஊருக்கு கிளம்புறேன் மா."

" இந்த நைட்டு நேரத்துல ஏன் டா கிளம்புற? அப்படி என்ன அவசரம்?"

" அது… ஒரு முக்கியமான வேலை. அவசியம் போகணும்." என்று அவரை நிமிர்ந்து பார்க்காமல் முணுமுணுத்தான்.

" தம்பி… எதா இருந்தாலும் காலைல போ பா."

" இல்லை நான் போறேன்." என்றவன் பேகை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

கார்த்திக் ஃபோனை எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு டென்ஷனாகிருக்க மாட்டான். தனத்தின் கலக்கத்தை கண்டு, நிதானித்திருப்பான். இது எதுவுமில்லாமல் படபடப்புடன் கிளம்பினான்

" நான் போறேன்." என்றதுதான் ரிஷிவர்மன் கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது கூறியது. அது போலவே அவன் திரும்பி வரவில்லை.

*****************************
மேனகா படுத்து படுத்துப் பார்த்தாள். ஆனால் உறக்கம் தான் வருவதாக இல்லை. ' தன்னுடைய அத்தானா இப்படி காசுக்காக கேவலாமா நடந்துக்குறாரே.' என்று குழம்பிக் கொண்டே இருந்தாள்.

" அதான் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிடுச்சே. எவன்னு ஆள் மட்டும் மாட்டட்டும். எல்லோருக்கும் இருக்கு." என்று வாய்விட்டு புவம்பியவள் உறக்கம் வராமல் இருக்கவே, அறையிலிருந்த ஜன்னலருகே சென்று வெளியே இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ தெரியவில்லை, அப்போது அங்கே ஒரு ஜீப் வந்து நின்றது.

' யார் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்காங்க. ஒரு வேளை ரவுண்ட்ஸுக்கு வந்திருக்காங்களா?' என்று எண்ணியவாறே அந்த அரசாங்க வாகனத்தை கூர்ந்து பார்த்தாள்.

முதலில் கார்த்திக் இறங்க.

' இவனா…' என்று அலட்சியமாக எண்ணியவள், ஜன்னல் கதவை மூடினாள்.

திடீரென்று அவளது மூளையில் பளீரென பல்பு எரிந்தது.

' நாம் எதிர்பார்த்த ஆளை இவன் தான் கூட்டிட்டு வந்திருக்கிறானோ.' என்று எண்ணியவள், பூனை போல் மெதுவாக கதவைத் திறந்து வந்தாள்.

அவள் வெளியே வருவதற்குள் ஜீப்பில் இருந்து, கார்த்திக் உடன் மூவர் இறங்கியிருந்தனர்.

அவர்கள் நால்வரும் அடர்ந்த வனத்தை நோக்கி சென்றனர்.

அவர்கள் வயது இருபதில் இருந்து இருபத்திஐந்திற்குள் தான் இருக்கும். எல்லோரும் பார்க்க கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போலவே இருந்தனர். அவர்களது கையில் பாட்டில்களும், சில கவர்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர்.

அவர்களை பார்த்தவளுக்கோ, எங்கோ பார்த்த மாதிரியே தெரிய, யார் என்று யோசித்துப் பார்த்தாள். ஆனால் நினைவுக்கு வரவே இல்லை. அவளை ரொம்ப யோசிக்க விடாமல் அவர்களே சொல்லிவிட்டனர்.

சிறிய இடைவெளி விட்டு அவர்களைத் தொடர்ந்து சென்ற மேனகாவிற்கு அந்த இரவு நேர மயான அமைதியில் அவர்கள் பேசும் அனைத்தும் தெள்ளத் தெளிவாக காதில் விழுந்தது.

அவர்களுடன் வந்திருந்த கார்த்திக் தலையை சொறிந்துக் கொண்டு, " சர்வேஷ் இப்போ இங்கே கொஞ்சம் கெடுபிடி அதிகமாயிடுச்சு. நாங்க எவ்ளோ ரிஸ்க் எடுத்து செய்றோம் தெரியுமா? நிறைய பேருக்கு ஷேர் கொடுக்கணும் கொஞ்சம் கூட கொடுங்க."

" பணம் தானே வேணும். இந்தா நீ கேட்டதை விட ரெண்டு பங்கு இருக்கு." என்று ஒருவன் அலட்சியமாக பேசியபடியே ஒரு கட்டு பணத்தை தூக்கிப் போட்டான்.

" அப்புறம் மரத்தை வெட்டாதீங்க. தேவையில்லாமல் பிரச்சனையாயிடும்."

" காசு வாங்கிட்டல்ல பொத்திக்கிட்டு போ. பிரச்சனை வந்தா எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்குத் தெரியும். எங்க அப்பா ஆளுங்கட்சி அமைச்சர் அது தெரியும் தானே." என்று தன்னைத் தானே அவன் அறிமுகப்படுத்திக் கொண்டு, கை நீட்டி காசு வாங்கிய கார்த்திக்கை கேவலப்படுத்தினான்.

அவன் பேசியதைக் கேட்ட நண்பர்கள் இருவரும் கார்த்திக்கைப் பார்த்து நக்கலாக சிரித்தனர்.

" சரி… அப்போ நான் கிளம்புறேன்." என்று சிரித்தப்படியே அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக்.

' சீ… கேவலமான பிறவியா இருக்கானே. இவனோடு அத்தானும் கூட்டு. அத்தை, மாமாவோட வளர்ப்பு எங்கே தப்பாக போனதுன்னு தெரியலையே.' என்று எண்ணி குமைந்தவள், கார்த்திக்கின் கண்ணிற்கு தெரியாமல் ஒரு பெரிய மரத்திற்கு பின்பு மறைந்துக் கொண்டாள்.

அவன் கண் தான் பணத்தைப் பார்த்ததும் குருடாகி விட்டதே. அங்கிருந்து சென்று விட்டான்.

"ஆரம்பிக்கலாமா?" என்ற ஒருவன் பாட்டிலை ஓபன் செய்ய… இன்னொருத்தன் எடுத்து வந்த கவரிலிருந்து நான்வெஜ் ஐட்டங்களைப் பிரித்தான்.

அரசியல்வாதியின் மகனோ, " என்ன தான் சொல்லு. போன முறை சாப்பிட்ட மான்கறி தனி ருசி தான். அந்த முட்டா பய. நாம என்னமோ தேவையில்லாம மரத்தை வெட்டப் போறமா? சமைச்சு சாப்பிட தான வெட்டுறோம். அதுக் கூட தெரியலை." என்றவன் வாயில் பாட்டிலை சரித்துக் கொண்டு நகைக்க.

" சர்வேஷ்… இந்த முறை எந்த விலங்கையும் வேட்டையாட வேண்டாம். சத்தமில்லாமல் கிளம்புவோம் டா." என்று ஒருவன் கூற.

" டேய் அவ்வளவு பயமா இருந்தா ஏன் டா இங்கே வர்ற? சரியான தொடைநடுங்கியா இருக்க? நான் இந்த மரத்தை வெட்டுவேன். எரிச்சுக் கூட விடுவேன். யாரு என்ன பண்ண முடியும்?
ஒரு மயிரும் புடுங்க முடியாது. நான் யார் தெரியுமா?" என்று குடிப்போதையில் உளறிக் கொண்டிருக்க.

மற்ற இருவரும் அவனை சமாதனப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதை எல்லாவற்றையும் தனது செல்ஃபோனில் அழகாக பதிவு செய்துக் கொண்டிருந்தாள் மேனகா.

திடீரென்று ஒரு கை, அவளது வாயைப் பொத்தி இழுக்க. உடல் பதற திமிறினாள்.
 
Top