Home Anti Heroineமுத்தமழை – 32

முத்தமழை – 32

by Vathani S

முத்தமழை – 32

“அவங்க கோபப்பட்டதுல என்ன தப்பு?” என கர்ணன் தன் அதிர்ச்சியை மறைத்து கேட்க, அங்கிருந்த அனைவரும் அதிரவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த வந்தனாவும், சீதாவும் கூட அதிர்ந்துதான் போயினர்.

“அண்ணா..” என  யாழி வர,

“உனக்கு என்ன தெரியும்? நீ அமைதியா இரு?” என அவளுக்கும் ஒரு அதட்டல் போட்டவன், “சொல்லு அவங்க கேட்டதுல என்ன தப்பு?” என மீண்டும் வனிதாவிடம் வந்து கேள்வியோடு நிற்க,

“அது.. அதுதான் சொல்றேன். அவங்க கேட்டதுல எந்த தப்பும் இல்லன்னு நீங்களே சொல்றீங்களே. அப்போ யாழிக்கும் அந்த பையனுக்கும் கல்யாணத்தை முடிச்சு வைங்க..” என்றாள் ஆத்திரமாக.

“நான் இப்போ கல்யாணம் செஞ்சிக்கமாட்டேன். யாரைக் கேட்டு இப்படியொரு முடிவை எடுத்தீங்க..” என யாழினி வழக்கத்துக்கு மாறாக அத்தனை பேர் முன்பும் கத்த, அனைவரின் பார்வையும் இப்போது யாழினியின் மேல் விழுந்தது.

சொக்கலிங்கம் மகளை ஆராயும் பார்வை பார்க்க, “அப்படி சொல்லுடி என் செல்லக்குட்டி.” என்ற்படியே யாழினியின் அருகில் வந்து நின்றாள் வந்தனா.

“நாங்க எங்க குடும்பம் விசயம் பேசிட்டு இருக்கோம். அதுல மூக்கை நுழைக்கக்கூடாதுன்ற பேசிக் மேனர்ஸ்கூட உங்க வீட்டாளுங்களுக்கு இல்லையா?” என அடங்காமல் வனிதா வாயைக் கொடுக்க,

“நான் தான் பேசினேன்.. நீங்க என்னைத்தான் சொல்லனும். அது என்ன எங்க குடும்பத்தையே இழுக்கிறது.. உங்களை மாதிரி வன்மமும், கெட்ட எண்ணமும் பிடிச்ச ஒரு பெண்ணை பெத்ததுக்காக, நானும் உங்க குடும்பத்தை இழுத்து பேசவா..” என வந்தனாவும் விடாமல் பேச,

“தனா..” என்ற வல்லியின் அதட்டல் அவள் வாயை அடைக்க,

“யார் என்ன சொன்னாலும், என்னால இப்போ கல்யாணம் செஞ்சிக்க முடியாது. உங்க இஸ்டத்துக்கு நீங்க எடுக்குற முடிவுக்கு நான் பலியாடாக முடியாது..” என்று யாழினி தீர்மானமாக பேச,

“யாழி.. நான் பேசிட்டு இருக்கும் போது எதுக்கு நீ இவ்ளோ வைலன்டா பிகேவ் பண்ற..? கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என கண்டிப்புடன் கூறி அதட்ட,  

“அண்ணா..” என்றாள் தவிப்பும், பயமும் நிறைந்த குரலில்.

“நீ இப்போ எதுவும் பேசக்கூடாது..” என யாழினியிடம் அழுத்தமாக கூறியவன், வனிதாவைப் பார்த்து “எனக்கு பொண்ணு பார்த்துட்டேன்னு நீயோ, அம்மாவோ என்கிட்ட சொன்னீங்களா? என்றான் நிதானமாக.

கர்ணனின் வார்த்தைகளில் இருந்த உண்மை சுட, “தம்பி..” என ராஜலட்சுமி தயங்க,

“என் பையன் நான் என்ன சொன்னாலும், கேட்பான். நான் சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சிப்பான்னு, நம்பிக்கையா அம்மா வாக்கு கொடுத்தாங்க. அந்த நம்பிக்கை உங்க மேல இருந்திருக்கக்கூடாதுனு சொல்றீங்களா?” என சுந்தர் இடையில் வர, இப்போது கர்ணனின் பார்வை அவனிடம் சென்றது.

“ஓ.. என் மேல இருந்த நம்பிக்கையில வாக்கு கொடுத்தாங்க. எப்போ கொடுத்தாங்க? வல்லியை எனக்கு பிடிச்சிருக்குனு சொன்ன பிறகுதான. ஏன் அதுக்கு முன்னாடி இந்த பேச்சே எடுக்கல..” என்றான் கிண்டலாக.

“மாமா.. முன்னாடி இருந்த சித்தி வீட்டுல கேட்டுட்டு தான் இருந்தாங்க. அத்தைதான் கொஞ்சம் டைம் கேட்டு வெய்ட் பண்ண சொன்னாங்க. நீங்க வரட்டும்னு சொல்லிருந்தாங்க…” கணவனை பேசியதில் சுமியும் அவள் பங்குக்கு தனக்கு தெரிந்ததை கூற,

“ஓக்கே சுமி.. எல்லாம் ஓக்கேதான். ஆனா இத்தனை நடந்தும் ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. நான் இங்க வரனும்னா இதை நீங்க சொல்லிருக்கனும்ல. நான் வர வரைக்கும் ஏன் வெய்ட் பண்ணனும். ஒருவேளை நான் வராமலே போயிருந்தா? ஹ்ம்ம் அவங்க நம்பிக்கை வச்சேன்னு சொல்றதை எப்படி நம்புறது?” என்று அவளிடமே திருப்பிக் கேட்க, சுமியால் பதில் சொல்ல முடியவில்லை.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ராஜி “இப்போ என்ன சொல்ல வர தம்பி? யாழினிக்கும் அந்த பையனுக்கும் தான் கல்யாணம் நடக்கும். அதை மாற்ற முயற்சி செய்யாத. அப்படி நடக்கலன்னா, வனிக்கும் பிரச்சினை சுந்தருக்கும் பிரச்சினை..” என்றார் தீர்மானமாக.

“ம்மா.. நானும் சொல்றேன் கேட்டுக்கோங்க. யாழினிக்கு என்ன விருப்பமோ அது மட்டும் தான் நடக்கும். உங்க பெரிய பொண்ணு வாழ்க்கைக்காக சின்ன பொண்ணு வாழ்க்கையை பழியாக்கிறாதீங்க. இப்போ இந்த பேச்சு போதும். யாழி இப்போதான் பிசினஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்கா, அவ நல்லா பண்ணட்டும், அதுக்குப்பிறகு கல்யாண பேச்சை எடுக்கலாம். அந்த வீட்டுல நீங்களே பேசி சமாளிங்க..” என முடிவாக கூறிவிட,

“அதெப்படி விட முடியும்.. என் வீட்டுல என்னோட மரியாதை என்னாகுறது..?” என வனிதா மீண்டும் போர்க்கொடி தூக்க,

“நீ இங்கேயே இரு. ஈவ்னிங்க் உங்க வீட்டாளுங்களை இங்க வர சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம். அப்படி என்ன உன்னோட மரியாதை குறையுதுனு நானும் பார்க்கிறேன்..” என வனிதாவைப் பார்த்து கர்ணன் கண்டிப்பாக கூற, வனிதாவின் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.

அப்போது சுமியின் போன் அலற, அனைவரின் கவனமும் அங்கு செல்ல “அம்மா தான்..” என எடுத்து “சொல்லுங்க ம்மா..’ என்ற சுமி “அண்ணி இங்கதான் இருக்காங்க. ஹான் சரி ம்மா.” என்று வைத்துவிட்டு,

“பசங்க எந்திரிச்சதும் அண்ணியை கேட்டு ஒரே ரகளையாம், அண்ணா கூட்டிட்டு வராராம்..” என மெல்ல கூற, கர்ணன் தங்கையை கண்டிப்புடன் பார்த்தான்.

அந்த பார்வையில் குளிர் பிறக்க “எப்பவும் இப்படி எல்லாம் கேட்கமாட்டாங்க..” என முணுமுணுக்க,

“ம்மா.. இன்னொரு தடவை இவ இங்க தனியா வரக்கூடாது..” என கோபமாக சொன்னவன், யாழினியிடம் “இன்னும் என்ன அப்படியே நின்னுட்டு இருக்க, வந்தவங்களுக்கு குடிக்க கொடு..” என அவளையும அதட்ட,


“ஸாரி ஆன்டி..” என சீதாவிடம் கூறிவிட்டு வேகமாக கிச்சனுக்குள் சென்றார்.

“பாண்டியன் அப்பாவை உள்ள கூப்பிட்டு போங்க..” என தந்தையை அறைக்கு அனுப்பிவிட்டு, மனைவியிடம் “நீ மேல ப்போ.. நான் ஆஃபிஸ் போய்ட்டு இப்போ வந்துடுவேன்..” என்றான்.

“ஹ்ம்ம்..” என்று அவள் பிணக்கமாக, வந்தனாவவிடம் செல்ல, வந்தனாவோ கர்ணனை முறைத்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். அதில் கர்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“இப்போ உனக்கு என்ன டி..?” என அவளிடம் சிரித்தபடியே கேட்க, 

“ஹான்.. நீங்க பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க ஓக்கேதான். ஆனா அதுக்காக ‘என்ன அங்க கேட்டாங்க, இங்க கேட்டாங்கன்னு உங்க வீட்டாளுங்க கொடுக்குற பில்டப் ஓவர். எங்க வல்லிக்கு என்ன குறைச்சல்னு இந்த தாய்க்கிழவி ஓவரா சீன் போடுது..” என கோபமாக கேட்க,

“தனா..” என வல்லி மீண்டும் அதட்ட, கர்ணனுக்கு மேலும் சிரிப்புத்தான் வந்தது.

“ஓவரா போறீங்க.. நான் வல்லியை என்கூட கூட்டிட்டு போய்டுவேன், பார்த்துக்கோங்க.” என மிரட்டிவிட்டு யாழினியிடம் ஓடிவிட, சீதாவோ மகளின் பேச்சில் தர்மசங்கடமாக மருமகனைப் பார்த்தாள்.

“அத்தை அவளைப்பத்தி தான் எனக்குத் தெரியுமே.. நீங்க ஏன் இவ்ளொ டென்சன் ஆகுறிங்க.” என அவரை சமாதானம் செய்துவிட்டு சுந்தரைப் பார்க்க, 

“நான் கிளம்பிட்டேன் ண்ணா..” என வந்து நிற்க, ராஜி மற்றும் வனிதாவின் பார்வைகள் கர்ணனிடம் குரோதமாக சென்று விழுந்தது.

“ம்மா மாப்பிள்ளை வரார். என்ன செய்யனும்னு பார்த்துக்கோங்க. நாங்க போனதுமே வந்துடுவோம்..” என்று கிளம்பிவிட, 

அவர்கள் கிளம்பியதும் வனிதா ஏதோ பேச ஆரம்பிக்க, “போதும் வனி. உன்னோட அவசரத்தனத்தால எவ்ளோ பிரச்சினை வருது பாரு. நேத்தே என்ன சொல்லி அனுப்பினேன், கொஞ்ச நாள் பொறு. பொறுமையா முடிவு பண்ணலாம்னு. இப்போ எதுவும் பண்ண முடியாத சூழல்ல கொண்டு வந்து நிறுத்திருக்க. போ போய் குளிச்சு ட்ரெஸ் மாத்து. மாப்பிள்ளை வந்துடுவார். இனி அவரை வேற சமாளிக்கனும்..” என சலிப்பாக கூற, இப்போது தாயின் மீதும் எரிச்சல் வந்தது வனிதாவிற்கு.

“என் பிரச்சினையை விடுங்க.. இவ ஏன் கல்யாணம் வேண்டாம்னு, ஒரேப்பிடியா சொல்றான்னு யோசிங்க..” என தாயிடம் கடுப்பாக சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

ராஜிக்கும் மகளின் பேச்சில் யோசனைதான். ‘ஏன் இப்படி முரட்டுப்பிடிவாதமாக கல்யாணமே வேண்டாம் என்கிறாள்?’ என அவருக்கும் பயம்தான். ஆனால் இருக்கும் சூழ்நிலையில் அதைப்பேசி மேலும் பிரச்சினையை வளர்க்க அவர் விரும்பவில்லை.

கர்ணன் சொன்னதைப் போல கொஞ்ச நாள் போகட்டும் பார்ப்போம் என நினைத்தவர், மாப்பிள்ளைக்கு என்ன சமைக்க வேண்டும் என கிச்சனுக்கு சென்றவர், அங்கு யாழியும் வந்தனாவும் பேசியதைக் கேட்டு சென்ற வேகத்திலேயே திரும்பி வந்திருந்தார்.

இங்கு அறைக்குள் வந்த சீதாவிடம் “இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல சீதாம்மா” என சமாதானம் செய்ய,

“ஆனா எனக்கு அப்படி தோணல  பாப்பா. அவங்க ரெண்டு பேரும் சும்ம இருக்குற ஆளுங்க இல்லன்னு தான் தோணுது..” என்றார் வருத்தமாக.

“அதெல்லாம் நான் சமாளிச்சிப்பேன் ம்மா. பாவா தான் கூடவே இருக்காரே.!” என மலர்ந்து புன்னகைக்க,

“ம்ச் பாரு.. ஒரு சந்தோசமான நிகழ்வு அதைக்கூட உணர விடாம எப்படி பிரச்சினை பண்றாங்கன்னு, இதுல இந்த வந்தனா வேற வெற்றியைப்பத்து என்னென்னவோ சொல்றா? அப்போ உனக்கும் தெரிஞ்சிருக்கும் அப்படித்தான..” என குற்றப்பார்வையுடன் கேட்க,

“ம்மா.. அது அண்ணா போஸ்டிங்க் வாங்கினதும் சொல்லிக்கலாம்னு சொன்னாங்க.” என இழுத்தவள், “அப்போ யாழிப்பத்தி தெரிஞ்சுதான் அண்ணி இந்த பேச்சை எடுத்திருப்பாங்கன்னு சொல்றீங்களா?” என யோசனையுடன் கேட்க,

“எனக்கும் அப்படித்தான் தோனுது.. இதனால உன் வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சினையும் வந்திடக்கூடாது..” என சீதாவும் கூறிவிட, வல்லிக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சொக்கலிங்கத்தின் அறையில் இருந்தார் பாட்டி. அவரின் முகமும் யோசனையாகத்தான் இருந்தது. காரணம் அவரும் யாழினி-வந்தனாவின் பேச்சைக் கேட்டிருந்தார்.

ராஜி நிச்சயம் இந்த சம்மந்தத்திற்கு சம்மதிக்கவே மாட்டாள். பேரன் எப்படி இவர்களை எல்லாம் சமாளித்து யாழினியின் திருமணத்தை நடத்தப்போகிறான் என்று கவலையாக இருந்தது.

‘இப்போது யாழினிக்கு இது தேவையா? என பேத்தியின் மீது கோபம் கூட வந்தது.

இங்கு சுந்தரோடு சென்று கொண்டிருந்த கர்ணனோ “அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்படி?” என விசாரிக்க,

“நம்மளவுக்கு இல்லைன்னாலும், ஓகேன்ற அளவுக்கு வசதிதான். யாழினிக்கு செட்டாகுற குடும்பம்தான். வனி மாதிரி ஆளுங்க இருக்கமாட்டாங்க..” என்றான்.

“ஹ்ம்ம்.. நல்ல குடும்பம்னா சரிதான். ஆனா யாழிக்கு விருப்பம் இல்லாம எதையும் செய்யக்கூடாது..” எனத் திட்டவட்டமாக கூறிவிட, சுந்தரும் மறுத்துப் பேசவில்லை.

இப்படி அத்தனை பேரையும் டென்சனில் வைத்திருந்த யாழினியோ வந்தனாவோடு மிகவும் ஜாலியாக பேசிக்கொண்டே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

You may also like

1 comment

M. Sarathi Rio March 21, 2026 - 1:00 pm

கர்ணனுக்கு யாழினி வெற்றியை காதலிக்கிறான்னு தெரியுமா, தெரியாதா. ? அப்புறம் எதுக்கு கட் அண்ட் ரைட்டா சொல்றதை விட்டுட்டு தலையைச் சுத்தி மூக்கை தொடுறான் ..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured