நீண்ட வராண்டாவில் தன் இரு பக்கமும் பார்வையைப் பதித்தவாறு, முகத்தில் என்றும் இருக்கும் மென் புன்னகையுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப் சகிதம் வலம் வந்தான் டாக்டர் துஷ்யந்த். முப்பது வயது விஷேட இளம் இதயநோய் நிபுணர்.
ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கேறிய புஜங்கள், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என...