மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 24
அதிர்ந்து நின்ற சித்தார்த்தின் முன் தன் விரல்களால் சொடுக்கிட்டாள் மதுரவர்ஷினி.
எப்பொழுதும் காட்டன் சுடிதாரில் வருபவள், இன்று தழையத் தழைய புடவை உடுத்தி, இயற்கை எழில் கொஞ்ச தன் முன்னே நிற்க, மேலிருந்து கீழாக கண்களால் அவளை அளவெடுத்தான் சித்தார்த்...