• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕5

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 26, 2023
Messages
12
அந்த மிருகத்தின் கையில் இருந்து விடுப்பட்டு தாவி தேன்மொழிடம் ஒன்றியவளுக்கு இன்னும் கூட உடல் நடுங்கி கண்கள் அனுமதி அற்ற கண்ணீர் சிந்துவதாய்...

ஏதோ வித்தியாசமான சத்தம் தன் கவனத்தை திருப்பியதில் சத்தம் வந்த திசை பக்கம் வேகவேகமாக வந்தவள் கண்ட காட்சியில் ஆத்திரம் தொனிக்க அஞ்சலி இங்க வா என பெரும் சத்தம் எழுப்பி அழைத்தவளின் குரலில் அவளை அனைக்க முயன்ற அந்த மிருகம் பட்டென அவளை தள்ளிவிட்டு தன் இச்சை நிறைவேறவில்லை என்ற வன்மதிலோ அல்லது வெறியிலோ தேன்மொழியின் புறம் அழுத்தமாக பார்வையை செலுத்தி முறைத்தவனின் பார்வை‌‌யை சலனம் அற்று எதிர் கொண்டு துச்சமாக காலில் போட்டு நசுக்கும் படியான அவளில் பார்வையில் எதுவும் செய்ய இயலாது உள்ள நுழைந்து கொண்டது அந்த நரி...

தன் நெஞ்சில் உடல் வெடவெடக்க குழந்தையாக ஒடுங்கி இருந்தவளை ஆதரவாக தலைக்கோதி ஒன்னும் இல்லடா என அவள் சிறிது ஆசுவாசம் படும் வரை ஆறுதல் அழித்து கண்ணீர் மட்டுபடும் வரை தாங்கியவள் பின் அவளை மெல்ல விலக்கி அவள் பயம் அறிந்து சாதரணமாக முகத்தை வைத்து கொண்ட போதும் கூட விழி ரௌத்திரம் சுமந்து வார்த்தையை வீசியது.. நீ ஏன் அவன பார்த்து பயப்படுற கால்ல இருக்க செருப்பு எடுத்து பிய்யபிய்ய அடிப்பியா..நீ என்னடான்னா அவன்கிட்ட கெஞ்சிட்டுயிருக்க என கடுமை தொனிக்க கேட்டவளுக்கு அத்தனை ஆதங்கம் இப்படி எல்லா நேரமும் பயந்து கண்ணீர் வடிப்பவளை எல்லா நேரமும் யாராவது காப்பாற்றி கொண்டே இருக்க முடியுமா..அவனை பாய்ந்து அடித்து எழும்பை முறிக்க வேண்டாம் குறைந்த பட்சம் தன்னை தற்காத்து கொள்ளும் அளவிற்க்கு கூட துணிவு அற்று தாக்குபவனிடம் கெஞ்சுவது எப்படி என்ற ஆதங்கத்தில் தான் எவ்வளவு முன்றும் வார்த்தை சற்று காரமாகவே வந்து விழுந்தது...

அப்போது அங்கே வந்த தேன்மொழியின் கனவன் ராகுல் ..அவள் அஞ்சலியை அதட்டுவதையும் அதற்கு மறுப்பேச்சு இன்றி தலை கவிழ்த்தி முகம் சுணங்கி நின்றவளையும் கண்டு அவர்கள் அருகில் வந்தவன் என்னாச்சு தேனு எதுக்கு அவளை திட்டுற என வினவ..

அவளும் நடந்ததை அனைத்தையும் அவனிடம் கூறி ஆதங்கப்பட்ட அதை கேட்வனுக்கு கோவம் உச்சிக்கு ஏறினாலும் தட்டி கேட்கிறேன் என மேலும் மேலும் இந்த சிறியவளை வதைக்க அவன் விரும்பவில்லை ஏனென்றால் இவனும் அவளின் சித்தியின் குனத்தை உணர்ந்தவன் தானே...

அதுவும் இல்லாமல் தன் முன் கண்ணனை கசக்கிக்கொன்டு நிர்ப்பவளை அதட்டி மட்டும் என் செய்ய முடியும் என நினைத்தவன் அவளை சகஜமாக்கு பொருட்டு...ஏம்மா இவ திட்டுனதுக்கா அழுகுற கஷ்டம் தான் போ அப்ப நான் எல்லாம் எப்படி குமுறி குமுறி அழுகனும் அது எல்லாம் வாங்கிட்டு அண்ண எப்படி தெம்பா நிக்கிறேன் பாரு அண்ணனை பாத்து கத்துக்கோ என சைக்கிள் கியாப்பில் தேன்மொழியை வாரி கேலி பேசியவனை அவள் திரும்பி முறைத்ததில் அசடு வழிய சிரித்து சும்மா ஜாலி தேனு என தோள் இடித்து சிரித்தான்...

இவர்களின் செல்ல ஊடலில் அவள் இதழ்களில் தன்னையும் அறியாமல் மெல்லிய புன்னகை அரும்பி சோகத்தை சில கனங்கள் ஒத்திப்போட்டது...

இங்கு இவள் சிறிதாக சிரித்ததும் கூட பொறுக்கவில்லை போலும் கழுகுக்கு மூக்கு வேர்த்தது போல் தங்குதங்கு என வந்தவள் எதர்ச்சியாக திரும்பியவளை முறைத்து கண்களால் மிரட்டி அழைக்க சிறுது நேரம் சந்தோசம் கூட நிலைக்க வழியற்ற தன் அவலைநிலையை என்னி நோந்து கொண்டவள் விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்...அவள் சென்றதும் இருவருக்கும் கூட ஒருமாதிரியாகி விட்டது...

அவள் நுழைந்ததும் அவளின் பின்னோடே உள் நுழைய போகும் முன் முகம் சுணங்கி நின்றவர்களை கண்டு ஓர் திமிர் பார்வை பார்த்து விட்டு உள் நுழைந்தவர் வந்த வேகத்தில் அஞ்சலி கன்னங்களில் தன் ஐவிரலும் பதியும் படி அறைந்து...அங்க கிட்ட என்னடி பேச்சு உனக்கு அவுங்க கூட நின்னு கூத்தடிச்சுட்டு இருக்கியா என இன்னும் பல நல்ல வார்த்தையால் அர்ச்சித்து அவளை விரட்டி அடித்த பின் தான்‌ ஒய்ந்தாள்...

காயங்கள் பழக்கப்பட்டு இதயம் மரத்து போன போதும் மரத்து போன இதயத்தை குத்தி கிளறுவதில் கண்ணகள் ஈரமாகி தான் போனது...

இருந்தும் அனைத்தையும் கிறகித்து தன்னுள் வழக்கம் போல் புதைத்து கொண்டு தனக்காகவே கொட்டி கிடந்த வேலையை கவனிக்க சென்றாள்...

எல்லா வேலையும் முடித்து நிமிர்ந்து நிற்பதற்குள் இடுப்பு ஒடிந்து போனது அவளுக்கு சிறு கர்சிப்பை கூட கசக்கி போடாமல் மூட்டை மூட்டையாக குவித்து போட்டு இருந்த துணியை துவைத்து பாத்திரம் அனைத்தையும் கழுவி விட்டு இவள் படுக்க செல்வதற்குள் வாணம் தன்னை கரும் போர்வைக்குள் சுழட்டி கொண்டு இரவு வேலை என உணர்த்தியதில் இத்தனை நேரம் வேலை பார்த்தில் களைப்புற்று சுணங்கிய விழியில் திடிரென பயம் அப்பி கொள்ள படபடவென பாத்ரூமினுள் சென்று கதவை அடைத்து கொண்டு கதவினோடே பள்ளி போல் அப்பி கொண்டவள் கிருஷ்ணா காப்பாத்து என தன் விருப்ப கடவுளை துணைக்கு அழைத்தப்படி நின்றவளின் வேண்டுதல் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை போல்...

ஏய் கதவை திற என பலமாக அவள் பதுங்கி இருந்த பாத்துரூம் கதவை தட்ட...அவளோ சத்தம் காட்டாமல் மௌனமாக உள் இருந்து கண்ணீர் வடித்து கொண்டு இருந்தாள்...திறனு சொல்லுறேன்ல என அவளை வேட்டையாடி தீர்க்கும் வெறியோடு கதவை பலங்கொண்டு தட்டியவன் திறடி என உறும அவளோ ஆதரவு தேடி கதவிலேயே ஒடுங்கி கொண்டாள்...

அதற்கு மேல் கதவை தட்டினால் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் இன்றி இரவின் நிசப்தத்திற்கு அருஅருகே அமைந்து இருக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவர் கூட முழித்து விட கூடும் என நினைத்தவன் இன்னைக்கு தப்பிச்சுடேன்னு ரொம்ப சந்தோசப்படாத என உறுமலாக வார்த்தையை வீசி அங்கு இருந்து சென்று இருந்ததது அந்த இரண்டு கால் மிருகம் வெற்றி...


அந்த பாத்ரூமின்னுள் காலை பகலவன் தன் பொன்னிற கதிர்களை பரப்பி ஒளிவீசும் வரை பதுங்கி இருந்தவள் அதன் பிறகு தான் வெளியே வந்தவளுக்கு தன் மீதே கழிவிரக்கம் தோன்றியது தன் நிலையை நினைத்து...

இரவு சரியான உறக்கம் இல்லாததில் கண்கள் திகுதிகுவென எரிந்த போதும் வரிசை கட்டி கொண்டு நிற்கும் வேலையை விடுத்து சற்று நேரம் இளைப்பாற முடியுமா இல்லை சித்தி விட்டு தான் விடுவாளா என நொந்தவள் வழக்கம் போல் அனைத்து வேலையையும் பார்க்க தொடங்கினால்...

காலை சமையல் எல்லாம் முடித்து எல்லாம் ஒதுக்கி விட்டு சற்று தடுமாறியபடி தேவகியிடம் வந்தவள் சென்னைக்கு செல்லும் விசயம் பற்றி தயங்கியபடி கூறியவள்

மேலும் விவரமாய் தனக்கு அங்கே சென்றால் பதவி உயர்வு ஐம்பதாயிரம் சம்பளம் என ஷிவானி கூறியதை அப்படியே கிளிப்பிள்ளையாய் வார்த்தை பிறழாமல் அப்படியே கூறி முடித்தவள் தன் சித்தின் முகத்தை பார்த்து நின்றாள்..

இவளின் கூடுதல் விவரம் பனத்தாசை பிடித்த தேவகியிடம் நன்றாக வேலை செய்தது..அவருக்கு இவளை அனுப்ப சுத்தமாக விருப்பம் இல்லை ஏனினில் யாரு வீட்டில் வேலை செய்வது‌‌..‌அப்பிடியே வேலைக்காரியே கிடைத்தாளும் சொல்லிய மாத்திரத்தில் சிட்டாக பறந்து சம்பளம் இன்றி பணிவிடை செய்யும் வேலைகாரி கிடைத்து விடுவாளா என்ன...

ஆனால் வரும் வருமானமும் யோசிக்க வைக்கிறது இருபதாயிரம் சம்பளத்திலேயே பெரிய பெரிய கனவுகளை வடித்தவர் ஐம்பதாயிரம் வேண்டாம் என்று சொல்லி விடமாட்டாரே ஆனால் வீட்டு வேலை தான் இடித்தது....அதுவும் இவர்கள் சுகபோக வாழ்வு வாழ இவள் தான் படி அளக்க வேண்டும்....ஆதலால் விருப்பம் இல்லாமல் ஒத்துக்கொள்வதுப் சரி என்று சம்மதித்தார்...

அவள் சம்மதித்ததும் மகிழ்ச்சி அடைந்தவள் சித்தி நிஜமா நா போகட்டுமா என கேட்க அதான் போனு சொல்லிடேன்ல போய் துலை ஆனால் அங்க போய் ஆட்டம் போடலாம்னு மட்டும் நினைக்காத கரெக்டா மாசம் மாசம் சம்பளம் வரனும் இல்லனா பாத்துக்கோ என மிரட்டி சென்று விட்டார்..

சந்தோஷத்தில் அவள் மிரட்டியது எல்லாம் அவளுக்கு உறைக்கவில்லை உடனே இந்த இனிய செய்தியை தன் தோழியிடமும் பகிர்ந்து மகிழ அவளும் தோழியின் மகிழ்ச்சியில் பங்கேற்று கொன்டாள்..

பிறகு எல்லோரிடமும் கூறிவிட்டு சென்னைக்கு கிளம்ப தயார் ஆனால் யாரும் போகாதே என கூறவும் இல்லை ஏனினில் தேவகியே போ என்ற பின் தங்களுக்கு என்ன என்ற நினைப்பில் விட்டு விட்டனர்..

இதற்கிடையில் வெற்றி வேறு இரவு நேரம் ஆனால் மானை துண்டாடி விழுங்கி ஏப்பம் விட எடுத்து முயற்ச்சியில் இருந்து ஒருவழியாக தன் பெண்மையை பாதுகாத்து கொண்டவள் ஊருக்கு செல்லும் நாளுக்காக காத்திருந்தாள்..

அவள் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது யாரும் பத்திரமாக இரு சாப்பிடு அடிக்கடி வந்துப் போ என எந்த விதமான பேச்சோ குறைந்த பட்சம் எப்ப வருவ என்று கூட கேட்கவில்லை கட்டு அவிழ்த்து விட்ட ஆடு போல் நீ சென்றால் எனக்கென்ன வந்தாள் என்ன என்னும் விதமாக யாரும் கண்டுக் கொள்ளவில்லை....

அவள் செல்வதில் சந்தோஷமும் சோகமும் ஒருங்கே கொண்ட ஜீவன் அவள் சித்தப்பா மட்டுமே...கிளம்பும் முன் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என அவர் அறைக்குள் நுழைந்ததும் ராஜன் அரவம் கேட்டு நிமிர்ந்தவர் அங்கே மெல்லிய சிரிப்புடன் நின்ற அஞ்சலியை கண்டு முகம் மலர வாடாமா என பரிவாக அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டவருக்கு அவளை பார்க்க பார்க்க குற்றவுணர்ச்சியே பெருகியது அன்றே அவளை ஹாஸ்டலில் சேர்த்து இருக்கலாம் அன்பு பாசம் கிடைக்காவிட்டாலும் நிம்மதியான வாழ்கையாவது மிஞ்சி இருக்கும் தன் நிழலில் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக இருப்பாள் என்று என்னியது பிழையாய் போனதில் அவருள் ஏதோ அழுத்துவதை போல் வலி....

அவர் என்றைக்கு நோய்வாய் பட்டு படுத்தாரோ அன்றில் இருந்து அவரை அறித்து கொள்ளும் விஷயம் இது தான்...ஒரு பெண்பிள்ளைக்கு அழிக்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு கூட தன்னால் கொடுக்க முடியவில்லையே என அவர் மனம் குமுறியது...இன்னும் வெற்றியால் இவள் அனுபவித்த துயரம் இவருக்கு தெரியவில்லை தெரிந்தால் கண்டிப்பாக அவர் உயிர் குற்ற உணர்ச்சியில் கூட்டில் தங்காது பிரிந்து விடும் என்பது தான் நிதர்சனம்...

யோசனையில் சுழன்றவரை மெல்ல உலுக்கி சித்தப்பா என அழைத்தவள் புறம் யோசனையை சிறிது நேரம் ஒரம் கட்டி விட்டு திரும்பி பார்த்தவரிடம் போய்ட்டு வரேன்..பத்திரமா இருங்க மாத்திரை எல்லாம் கரெக்ட்டா போடுங்க அடிக்கடி முடியலாட்டியும் அப்பப்போ வாக்கர் வச்சு நடக்க பாருங்க சரியா அப்பறம் என கூற வந்தவளை சிரிப்புடன் தடுத்தவர் போதும்டா என வாஞ்சையோடு அவள் தலை வருடி... நீ பாதுகாப்பா இரு டா நல்லா சாப்பிடு என் பத்தி கவலை படாதே நான் இருந்தப்பேன்.. என கூற அவளும் சரி என தலை அசைத்து மீண்டும் அதே அறிவுரையை பட்டியலிட்டு ஆயிரம் பத்திரம் கூறி கொன்டு கிளம்பினாள்...

வெளிய வந்தவள் தேன்மொழியிடமும் கூறிவிட்டு திவ்யா பாப்பாவை தூக்கி முத்தமிட்டு கொஞ்ச அந்த சின்னஞ்சிறிய பிஞ்சுக்கு முன்னமே தெரிந்து இருந்தது போலும் இனிமேல் இவள் இங்கு வரமாட்டால் என்று அவளை விட மறுத்து இறுக்கி அனைத்து கொண்டு விடமாட்டேன் என ஷேட்டை செய்த பிள்ளையை
எப்படியோ சமாதானம் செய்து தேன்மொழிடம் கொடுத்தவள் விடைப்பெற்று சென்றாள் புது அத்தியாயங்களை நோக்கி...

ஷிவானி பேருந்து நிறுத்தம் வரை வந்து அவளை விட தோழிகள் இருவரும் கண்ணீரில் முழ்கி ஒருவரைஒருவர் தேற்றிக் அனைத்து கொண்டு பிரியாவிடை பெற்று தங்கள் பதையில் சென்றனர்...

***************

இங்கே ஒருவன் ஓர் நவநாகரிக யுவதியுடன் திளைக்க திளைக்க கூடல் கொண்டு கட்டிலை அதிர விட்டு கொண்டு இருந்த நேரம் விடாது அழைத்த தொலைபேசியில் எரிச்சலுற்று பெரிதாக சலித்து அவன் கைப்பேசி எடுத்து காதிற்கு குடுக்க அங்கே சொல்லபட்ட தகவலில் அவன் கண்கள் சிவந்து ஒநாய் போல் வெறியாக உருண்டதை பார்த்து அந்த யுவதிக்கு உதறல் எடுத்த போதும் அவனை விலகாது சேவை செய்து கொண்டிருக்க... அவனோ அதர்ஷாஆஆஆஆ என ஒளமிட்டு தன் மேல் ஏறி அமர்ந்து இருந்தவளை பொம்மை போல் வீசி ஏறிந்து எழுந்து நின்றவன் படபடவென கீழே இறங்கி வந்தான்.... அவனுள் அத்தனை வெறி முகழ்ந்தது அதர்ஷனை வீழ்த்த பல திட்டங்கள் தீட்டி அதை சரியாக வெடிக்க வைக்க போகும் சமயம் அதை இவன் பக்கமே திருப்பி ஆப்பாக வைப்பவனை நினைத்து அடக்க முடியாத வெறியே மிஞ்சியது...

திடுதிடுவேன வெளியே வந்து தன் அடியாட்கள் முன் குதித்து நின்றவன் "அமர் எங்க" என உச்சி மண்டையில் சுட ஏற கேட்க..அவன் அவதாரத்தில் எதிரில் பீம் பாய் போல இருப்பவனுக்கே சற்று கொலை நடுங்க தான் செய்தது....அவன் சுடாக வந்ததும் இப்போது கத்துவதை சுவாரஸ்யம் கலந்த கோனல் சிரிப்புடம் பார்த்தப்படி இறங்கி வந்தவளுக்கு எப்படியும் வயது ஐம்பதை தொடும் ஆனால் அந்த வயதிலும் முகத்தில் அறை கிலோ முகப்புச்சு அப்பிக்கொன்டு பார்க்கவே நாரசமாக முகம் சுலிக்க வைக்கும் படி வந்தவரை கண்டு அங்கு இருந்தோர் முக சுலிப்புடன் பார்க்க ஆனால் அது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லைப் போலும்...

நேராக அவன் முன் வந்து பேபி வாட் ஹப்பெண்ட் என கேட்க மாம் அவன் திருப்பி திருப்பி என் வழில வரான் மாம் ஐ கான்ட் டோழரேட் ஐ கான்ட்ஆஆஆ என காட்டுதனமாக கத்தியவனின் தோள் தட்டி...இங்க பாரு இது கோவம் படவேண்டிய டைம் இல்ல வி ஹவ் டு திங் என கூறி அவனை சமாதானம் செய்து திட்டங்கள் வகுத்து அதர்ஷனை அழிக்க யோசிக்க தொடங்கினாள் அவள்..

இவர்களை இங்கே அல்லாட விட்டவனோ தனது பஞ்சனையில் நிம்மதியாக சரிந்து கனவில் தன் கனவு நாயகியுடன் விரல் பினைந்து நடனம் பயன்று கொன்டிருந்தான் அதர்ஷன் வர்மா...

தொடரும்...........
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
31
அப்போ இனி சித்தி வீட்டுக்கு வரமாட்டான்னு நிம்மதி அடையறதா இல்ல புதுசா அதர்ஷனோட எதிரிகிட்ட மாட்டிக்கப் போறாளேன்னு வருத்தப்படுறதா?
 

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 26, 2023
Messages
12
அப்போ இனி சித்தி வீட்டுக்கு வரமாட்டான்னு நிம்மதி அடையறதா இல்ல புதுசா அதர்ஷனோட எதிரிகிட்ட மாட்டிக்கப் போறாளேன்னு வருத்தப்படுறதா?
Varuthapadadhinga adhan adharshan irukkan la
 
Top