• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

3. பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் - இதயத்திலே தீப்பிடித்து

Joined
Jan 3, 2023
Messages
76
இதயத்திலே தீப்பிடித்து

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது...
உனை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீளத்தில் எனை புதைக்கிறேன்
இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணில் காண்பேனோ

கதறிக் கொண்டிருந்த கைப்பேசியில் பிரகாஷின் கவனம் இல்லை. அவனே அவ்விடம் இல்லை. அவன் கண்களில் மெல்லியதோர் நீர்ப்படலம்.

விழியைத் தாண்டி கீழே விழுவேன் என்று பயமுறுத்தியபடியே அது தேங்கிக் கொண்டிருந்தது.

அவன் அப்படி இடிந்துப் போய் ஓரமாய் நிற்பதை அறிந்து பக்கத்தில் இருந்த சத்யனுக்கு மனம் தாளவில்லை.

"பிரகாஷ் என்னடா இது சின்னக்குழந்தை மாதிரி"

"ப்ச்" அவனிடம் அதிருப்தி ஒலி.

"பிரகாஷ் இதுல இருந்து வெளிய வந்து வேலையை பாரு"

வெளிய இருக்குற உன்னால சொல்லிட முடியும் சத்யா உள்ளிருக்கும் என்னால் இந்த வலியினை தூரப்போட்டு வெளிவருவது சாத்தியமில்லாத ஒன்று பதில் சொல்லாமல் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

பிரகாஷிற்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை. எவ்வளவோ காதலைக் கொட்டிக் கொண்டிருந்தவள் எதற்காக இப்படி பாதியிலே விட்டுவிட்டு போனாள் என்று.

அதற்கான காரணம் சொல்லியிருந்தால் கூட இந்த வலியின் ரணங்கள் கொஞ்சம் குறைவாய் இருந்திருக்கும். இப்போது எதுவுமே தெரியாமல் வேதனைப்படுவது அவனுக்கு அவ்வளவு வலித்தது.

இத்தனைக்கும் அவளுக்கும் அவனுக்கு நடந்தது காதல் திருமணம். அவளளவுக்கு என்னை யாரும் புரிந்துக் கொள்ளவே இல்லை என்ற ரீதியில் இவன் வானில் சிறகடித்துப் பறந்துக் கொண்டிருக்க அவளோ உன் எண்ணம் தவறு என்று புரியவைத்துவிட்டு அவனை தடுமாறி தலைகுப்புற விழ வைத்து விட்டு சென்றுவிட்டாள்.

என்ன காரணமாக இருக்கும் என்று இதோ இத்தோடு ஆயிரம் முறை யோசித்தாகிவிட்டது. ஆனால் பதில் தான் கிடைக்கவே இல்லை. போன் பண்ணினாலும் கல்நெஞ்சக்காரி எடுக்க மாட்டேன் என்கிறாள்.

வீட்டுக்குப் போன போதும் முகம் கொடுத்துப் பேசவே இல்லை. அப்படியென்ன நான் பிழை செய்தேன் புரியவே இல்லையே..
இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் பாட்டின் ஓசை தடைப்பட்டது.

"இல்லை வித்யா" என்று சத்யன் யாரிடமோ பேசத் தொடங்கியதும் கேட்டது.

"அப்படியேதான் இருக்கான் வித்யா"

"...."

"நானும் எவ்வளவோ சொல்லிட்டேன்"

"..."

"இல்லை இல்லை கேக்க மாட்டுறான்"

"...."

"எங்க ஒரே பாட்டுதான் ரிப்பீட் மோடுல ஓடிட்டு இருக்கு"

"...."

"அவன்கிட்ட தரணுமா. இரு தர்றேன்... பிரகாஷ் இந்தா வித்யா உன்கிட்ட பேசணுமாம்" என்று போனை நீட்டினான்.

"சொல்லும்மா"

"என்ன பிரச்சனை?"

"அது தெரிஞ்சா நல்லாருக்குமே. அதுதான் என்னென்னு தெரியலையே"

"நான் வேணும்னா அஞ்சனா கிட்ட பேசவா"

"இல்லை வேண்டாம் ம்மா. இந்த பிரிவு எங்களுக்கு இடையில இருக்க உறவை இன்னும் வலுப்படுத்தும்னு நான் நம்புறேன். அவளாலயும் சரி என்னாலயும் சரி பிரிஞ்சு ரொம்ப நாள் இருக்க முடியாது. அவ வந்துடுவா. வரமாட்டேன்னு சொன்னா அவளை எப்படி வரவைக்கணும்னு எனக்குத் தெரியும்‌. இதுல வேற யாரும் உள்ள போறது அவ்வளவா நல்லா இருக்காது ம்மா"

"சரி பிரகாஷ் எல்லாமே சரியாகிடும்" என்று அவள் சொல்லவும் அவன் சத்யனிடமே போனைத் தந்தான்.

"பேசினயா..."

"ம்ம். அதுசரி. உன் போன் எப்பத்தான் சரியாகும்"

"சர்வீஸ் பண்ணக் குடுத்துருக்கேன் வித்யா. அவன் மதுரைக்கு குடுத்துவிட்டுருப்பான் போல. அவன்கிட்ட குடுத்ததுக்கு நான் புதுமொபைலே வாங்கியிருக்கலாம். சரி விடு, அதான் இவன் மொபைல் இருக்கே. இன்னும் ஒரு இரண்டு நாளைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வச்சுடவா" என்று சொல்லி அவன் வைக்க மீண்டும் வலியென்றால் காதலின் வலிதான் என்று அந்த மொபைல் அலறி காது ஙொங் என்று வலிக்கத் தொடங்கியது சத்யனுக்கு.

"டேய் பாட்டையாவது மாத்து" என்று காதைத் தேய்த்து விட்டபடி அவன் வர

"நீ உன் ஆளுகிட்ட பேசிட்டேல போனை வச்சுட்டு கிளம்பு வந்துட்டான்" என்று அவன் திட்டவும் கிளம்பிவிட்டான் சத்யன்.

அவன் போனபிறகும் யோசித்துக் கொண்டே இருந்தவன் வேகமாய் போனை எடுத்து அவளுக்குப் போன் பண்ணினான்.

அவளது மொபைல் அங்கே அடித்தது..

தனியே தனியே தனியே
அவன் உலகினில்
நான் மட்டும் தனியே

என்று அவளது மொபைல் இசைக்க அவனது புன்னகை நிறைந்த முகம் டிஸ்ப்ளேயில் தெரிந்தது.

முணுக்கென்று கண்ணில் கண்ணீர். இதயத்தில் வலி.. தொண்டையினை இறுக கவ்வியது துக்கம். இப்போது இவள் இருக்கும் நிலையினைப் பார்த்திருந்தால் பிரகாஷ் கல்நெஞ்சுக்காரி என்று சொன்னதிற்காக தன் நாவினையே சபித்திருப்பான்.

பிரகாஷ் அவளது இதழ்கள் முணுமுணுத்தது. தொடுதிரையினையே ஆசையோடு அவள் தழுவினாள். எடுத்துப் பேச மட்டும் மனம் ஒப்பவில்லை. அவளது இதயத்தில் இருந்த காதலென்னும் கூடு கல்லெறிந்து சிதறிப்போயிருந்ததைப் போல் சிதைந்திருந்தது.

பிரகாஷ்! நான் உன்னை ரொம்ப நம்புனேன். ஆனால் நீ.. நீ.. நீயும் சராசரி ஆள் போல நடந்துக்கிட்ட. என்னோட நம்பிக்கையை அடியோடு உடைச்சுட்ட டா. எனக்கு இது எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்று உனக்குத் தெரியாதா? உன் மேல வச்சிருந்த அவ்வளவு காதலும் இப்போ என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்குது. இதை என்னால தாங்க முடியலை. இப்பவும் மனசு ஏத்துக்கவே இல்லை. நீ இப்படிப் பண்ணியிருப்பன்னு. ஆனால் கண்ணால நான் பார்த்தேனே. அதை இல்லைன்னு சொல்ல முடியாதே. உன்கிட்ட பேசுனா மனசு உன்பக்கம் சாயும். என்னோட பலவீனம் நீதானே.‌ அதனாலே தான் போனை அட்டென்ட் பண்ணாம நான் இறுக்கமாகவே இருக்கேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் கொஞ்ச நாள் தான் சரியாகிடும்.. சரியாகிடும் பிரகாஷ். ஐ லவ் யூ.. பட்??? துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.

அருகே இருந்த தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அறையில் இருந்த கல்யாணப் போட்டோவினைப் பார்த்தாள்.

அமர்ந்திருந்த கட்டிலைப் பார்த்தாள். அங்கே எத்தனையோ தடவை அவர்களது ஊடலும் கூடலும் நிகழ்ந்திருக்கிறது. அதை நினைத்த மாத்திரம் அவளது ஒவ்வொரு செல்லும் பிரகாஷ் பிரகாஷ் என்று கத்தியது.

அப்படியே படுத்துக் கொண்டாள். கண்ணீர் மெல்லிய கோடாய் இறங்கி படுக்கையை நனைத்தது.

இப்போது முன்நெற்றியில் ஒரு ஸ்பரிசம். அவள் தேகம் நடுங்கியது.

"அஞ்சு!" மென்மையாய் ஒலித்தது பிரகாஷின் குரல். காதுகளை இறுக மூடிக் கொண்டாள் அவள்.

"போயிடு பிரகாஷ்!" கையை நீட்டி காற்றிலே அவனைத் துரத்தினாள்.

நிசப்தமாயிருந்தது அறை.

மெல்ல மெல்ல விம்மத் தொடங்கினாள்.

அங்கே அவனிலை அதைவிட படுமோசம். "அஞ்சு அஞ்சு" என்று அவன் உளறலை கேட்ட சுவர்களெல்லாம் அவனை பாவமாய் பார்த்தது‌. இத்தனை நாளும் அவர்களது கொஞ்சலையும் கூடலையும் பார்த்து வெட்கத்தில் சிவந்திருந்த சுவர்கள் இன்றவன் மட்டும் தனித்திருந்து படும் துயரத்தினைக் கண்டு எப்படி அவனைத் தேற்றுவது என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தது.

"அஞ்சு.. ஏன் டி.. நானென்ன பண்ணேன்‌ எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை" என்று அவன் ஆற்றாமையில் வெடித்துக் கொண்டிருக்க வெளியே "ம்மா" என்ற குரல் கேட்டது.

அவ்வளவுதான்.. எழுந்து விட்டான்.
கதவைத் திறந்து பிரகாஷ் அங்கிருந்த காளையினை நோக்கிச் சென்றான்.

வளர்ந்திருந்த கொம்பினையும் நீண்டிருந்த அதன் திமிலையும் வருடியவன் புண்ணாக்கினை எடுத்து கலந்தான். பின்னர் அதனை தடவி "டேய் காளையா.. " வாஞ்சையோடு அவன் பார்க்க அதுவோ அவன் முகத்தினை உரசியது.

அந்த தொடுதல் அதுவரை ரணப்பட்டிருந்த மனதிற்கு அவ்வளவு ஆறுதலை அள்ளித் தந்தது.

"காளையா குடிடா.. "

அதுவோ மாட்டேன் என்பது போல் மறுக்க "என்னாச்சு உனக்கு?" என்றான் அவன். அதுவோ மாட்டேன் என்று மட்டும் தலையை ஆட்டிக் கொண்டே இருக்க "எனக்குச் சாப்பிடப் பிடிக்கலை. அஞ்சு இல்லாம எனக்கு சாப்பாடு இறங்க மாட்டேங்குது. ப்ளீஸ் நீ சாப்பிடு" என்றான் பிரகாஷ்.

"ம்மா ம்மா" என்று காளையன் முரண்டு பிடிக்க அவனுக்காக போய் உணவு எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான் பிரகாஷ்.

"உக்காந்துட்டேன். நீ குடிடா" என்று சொல்லவும் நீ வாய்ல சாப்பாடை வச்சாத்தான் டா நானும் வைப்பேன் என்று அது அசையாமல் இருக்க இவன் அள்ளி அள்ளி சாப்பிடத் தொடங்கினான்.

அதன் பின்னர்தான் காளையன் அவனுக்கு வைத்ததை சாப்பிடத் தொடங்கினான்.

"டேய் காளையா அவளுக்கு என்னவாம் டா. எதுவுமே சொல்லாம அவபாட்டுக்கு அவங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிப் போயிட்டாளே டா. நான் பாவம்னு அவளுக்குத் தெரியாதா. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்"

அவளும் தான் பாவம். நீயில்லாம அவ மட்டும் எப்படி இருப்பா என்று காளையன் சொன்னது இந்த மக்குக்கு கேட்கவே இல்லை.

அவனுக்கு தங்களது இனிமையான காதல் தருணங்கள் அனைத்தும் வரிசைக்கட்டிக் கொண்டு நினைவுக்கு வந்தது.

அதை அப்படியே காளையன் போலவே அசைப் போட்டுக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

அவளைப் பார்த்த முதல் தருணம். அவன் நினைவில் வந்து அவன் இதழோரத்தில் சின்ன புன்னகையை தோற்றவித்தது.

கண்ணை மூடிக் கொண்டான்.
இப்போது அந்நாளிற்கே அவன் சென்றுவிட்டான்.

பொங்கல் திருநாள் என்பதால் ஊரே ஆட்டமும் பாட்டமுமென கோலாகலமாக இருந்தது. ஜல்லிக்கட்டிற்கு செல்லும் காளைகள் எல்லாம் அழகாய், திமிராய் அந்த வீதியில் வந்துக் கொண்டிருக்க காளையனையும் பிரகாஷ் அழைத்துக் கொண்டு வருகையில் தான் அஞ்சனாவைப் பார்த்தான்.

அவளோ தோழியின் பின்னால் நின்றுக் கொண்டு சற்று பயத்தோடே காளைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா லட்சுமி? யாரது? புதுசா இருக்காங்க. அதுவும் பயந்தாங்கோளியா இருப்பாங்க போலயே" இயல்பாய் அவன் கேலி பேச அஞ்சனாவிற்கு முகம் சிவந்துவிட்டது.

"அண்ணே எங்க மாமா பொண்ணு.. ஊர்ல இருந்து வந்துருக்கா. இவ இதையெல்லாம் பார்த்து இல்லைல அதான் கொஞ்சம் பயப்படுறா"

"பார்த்தும்மா"

"எங்களைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்" பட்டென்று அஞ்சனா சொல்லவும் "ஓ..." என்று மட்டும் ஒரு மார்க்கமாக சொல்லிவிட்டு அவன் நடக்க "ஏய் லட்சுமி! யாரு இவங்க?" என்றாள் அஞ்சனா.

"பேர் பிரகாஷ். பெரியப்பா பையன். படிச்சுட்டு மாடுகளையும் காளையையும் பார்த்துட்டு அவங்க அப்பா விட்டுட்டுப் போன தோப்பையும் கவனிச்சுட்டு இருக்காங்க. ரொம்ப நல்லவங்க"

இப்படிச் சொல்லி முடிக்கவும் அவள் பிரகாஷை பார்த்தாள். அவனும் சொல்லி வைத்தார்போல் அவளைத்தான் பார்த்தான்.

பார்த்து முடித்தவன் சின்னச் சிரிப்போடு திரும்பிக் கொண்டான்.

ஏதோ ஒரு நூதன உணர்வு இருவரையும் ஆட்கொண்டிருந்தது.

மறுநாள் அஞ்சனாவும் லட்சுமியும் கோவிலுக்குப் போய்விட்டு வரும் போது "நீ வீட்டுக்குப் போ சனா.. நான் அண்ணனை பார்த்துட்டு வந்துடுறேன்" என்றாள் லட்சுமி.

"அண்ணனா"

"ம்ம் நேத்து பார்த்தோம்ல பிரகாஷ் அண்ணன்"

"அவங்களுக்கு என்ன?" பதறிப்போய் அவள் கேட்டதும் "நேத்து ஜல்லிக்கட்டு போயிட்டு வந்தாங்கள்ல அப்போ ஒரு பிரச்சனை" என்றாள் இவள் யோசனையாகவே.

"அச்சச்சோ" அவள் உண்மையிலே பதறிப்போனாள்.

"ஊர்ல ஒரு பொறுக்கி நாயி இருக்கு. அதுக்கும் அண்ணனுக்கும் ஆகவே ஆகாது. அவனுக்கும் அண்ணனுக்கு நேத்து சண்டை போல. அதுல அண்ணனுக்கு கால்ல காயம். அதான் பார்த்துட்டு வரலாம்னு போறேன்"

"நானும் வர்றேன் லட்சுமி"

"நீயா?"

"ப்ளீஸ் நானும் வர்றேன்" என்று அவளும் உடன் சென்றான்.

காளையன் வெளியே கட்டியிருக்க அவன் உள்ளே கட்டிலில் படுத்திருந்தான்.

இருவரும் உள்ளே நுழைய அவன் அஞ்சனாவைப் பார்த்து வா என்பது போல் தலையசைத்தான்.

"ஏன் அண்ணா! இப்படி வம்பு இழுத்துட்டே திரியுற"

"அவன்தான் ம்மா"

"சரி, இப்போ கால் வலிக்குதா?"

"இப்போ கால் வலிக்கல"

"பின்ன?"

"அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது"

"சரி சாப்பிட்டயா"

"இன்னும் இல்லை. ப்ரண்ட்கிட்ட சொல்லியிருக்கேன் சாப்பாடு வாங்கிட்டு வருவான். காஃபி மட்டும் போட்டுத் தர்றயா"

"சரி அண்ணா" என்று அவள் உள்ளே சென்றுவிட தனித்திருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"வேற எங்கயோ வலிக்குதுன்னு சொன்னீங்க. எங்க?" மென்மையாய் அவள் கேட்கவும்

"இங்க" என்று தனது நெஞ்சினை அவன் காட்ட அவளோ முழித்து பின் சிவந்து தலைகுனிந்துவிட்டாள்.

"பேர் என்ன?" இப்போது அவனிடத்திலும் மென்மை.

"அஞ்சனா"

"அஞ்சு நல்ல பேர்.. என்னைப் பார்க்க வந்ததுக்கு தாங்க்ஸ்"

"கவனமா இருங்க. யார்கிட்டயும் அநாவசியமா சண்டை போடாதீங்க"

"இனி போடலை"

"நிசமாவா"

"ம்ம் "

"தாங்க்ஸ்"

"உன்னை பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது அஞ்சு"

"அது நடக்குறது உங்க கையில தான் இருக்கு "

அதற்குள் லட்சுமி காபியோடு வந்துவிட்டாள்.

அஞ்சு கிளம்பியபோது அவளது விழிகள் உங்ககூடவே இருக்கணும் போல இருக்கு என்று யாசிக்க அது பிரகாஷிற்கும் புரிந்துப் போனது.

அவள் ஊருக்குக் கிளம்பியப் பின் பிரகாஷின் நடவடிக்கைகள் அதிரடியாக இருந்தது. சித்தப்பாவிடம் பேசி அவரது மச்சினனிடம் பேச வைத்து அவளை கல்யாண மேடையில் கொண்டு வந்து நிறுத்தியும் விட்டான்.

அவனின் சரிபாதியாய் மாறி அவள் அந்த ஊருக்குள் நுழைந்த போது அதை லட்சுமி அடைமொழியிட்டு அழைத்த அந்த பொறுக்கி நாய் மாணிக்கம் துவேசத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

அவனின் மனதிற்குள் வஞ்சினம் சூழ்ந்துக் கொண்டது. எப்படியாவது இவனை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று.

மாணிக்கம் தனது கூட்டாளியோடு அமர்ந்திருந்தான். அவன் முகம் தீயிலிட்டதைப் போல் வெந்து சிவந்திருந்தது.

"டேய் பங்காளி அந்த பிரகாஷை வலிக்க வலிக்க அடிக்கணும்டா"

"விடு பங்காளி பார்த்துக்கலாம். "

"இல்லை டா அவனை அழ வைக்கணும். அவனுக்கு அந்த காளையன்தானே உசுரு.. அதை ஏதாவது பண்ணனும்"

"வேண்டாம் மாப்பிள்ளை உசுருக்கு உசுராய் வளர்க்குற காளையை தொட்டா எம்புட்டு வலிக்கும்னு நமக்கும் தெரியும். அதைப் போய் பிரகாஷ்க்கு தரப்போறீயா.. அவனை அழவைக்க அவனை அடிடா. நம்ம கூடப் பொறந்த பொறப்பு போல நினைச்சுட்டு இருக்குற காளைமேல கையை வைக்காத. இப்போ என்ன அவன் சந்தோசமா இருக்கக் கூடாது அவ்வளவுதானே அதை நான் பார்த்துக்கிறேன். அதுவும் இல்லாம பையன் புதுமாப்பிள்ளை கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருக்கட்டும்"

சொல்லிவிட்டு அவன் சென்றபின் மாணிக்கத்தின் விழிகள் துவேசத்துடன் அவனை முறைத்துப் பார்த்தது. எதிரிக்கு சப்போர்ட் பண்ணிட்டு போற இவனை நம்புறது இனி வேஸ்ட். நாமளே ஏதாவது பண்ணனும். எல்லா தடவையும் காளையனுக்கும் அவனுக்கும் தான் நம்ம ஊர்ல தடபுடலான வரவேற்பு அதை உடைக்கணும். காளையன் இருக்குறதால தான அவனுக்கு அம்புட்டு பெருமை. காளையனை தூக்கிட்டா அவன் மனம் குரூரமாய் யோசிக்கத் தொடங்கி அதற்கான சமயத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

அன்றைய இரவு...

பிரகாஷ், அஞ்சனா அறையில் அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் வந்தாள் அஞ்சனா.

நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்த அந்த இருள் வேளையில் அவளையே வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அஞ்சு"

"ம்ம்"

"உனக்கு என்னைப் பிடிக்குமா?"

"தாலி கட்டிட்டு முதல் ராத்திரியில கேக்குற கேள்வியாடா இது"

"டா வா.. ஐய் நல்லா இருக்கே "

"அதுசரி எதுக்கு அப்படியொரு கேள்வி"

"நாம் பார்த்துக்கிட்டது இரண்டு நாள் தான். உடனே பிடிச்சுருக்குன்னு கல்யாணம் வரைக்கும் வந்துட்டோம். இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு.. "

"கனவு மாதிரி இருக்கா அப்போ கனவுலயே எல்லாம் நடக்கட்டும் நான் போய் தூங்குறேன்"

"அடியேய் என்னடி" பதறிப் போய் அவன் கேட்க "நீ கனவுலயே குடும்பம் நடத்து எனக்கு தூக்கம் வருது" என்றாள் அவள்.

"அடிப்பாவி அன்னைக்கு காளையனைப் பார்த்துட்டு லட்சுமி பின்னாடி ஒளிஞ்சவளா இவ ன்னு ஆச்சர்யமா இருக்கு. இப்படிப் பேசுறயே டி"

"புருசன்கிட்ட போய் பயந்துட்டு பேசாம இருந்தா.... " சொல்லிவிட்டு அவள் நிறுத்திவிட

"இருந்தா..." என்று அவன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்..

"ம்மா...." சரியான நேரம் பார்த்து காளையன் கத்த அவன் அந்த நினைவுகளினை விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.
அதுவோ கத்திவிட்டு அவன் கன்னத்தினை முட்டிவிட்டு நாவால் தடவியது...

இப்படியெல்லாம் இருந்தவர்கள் இப்போது எதிரும் புதிருமாய் இருக்க பொங்கல் நாளும் வந்தது.

போன பொங்கல் தான் அவனது காதலுக்கு அஸ்திவாரமிட்டது. ஆனால் இந்த பொங்கல் இந்த கேள்விடனே அவன் எழுந்தான். இரவெல்லாம் அவளைக் குறித்தே நினைத்ததில் உறங்காத விழிகள் இரண்டும் எரிச்சலில் சிவந்து போயிருந்தது.

அஞ்சனாவோ காலையில் கண்ணைக் கூடத் திறக்காமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் அவங்க பிரச்சனையில நாம தலையிடக்கூடாது. பொண்ணு அவளாவே புரிஞ்சுக்குவா என்று அமைதியாக ஒதுங்கியிருந்தாலும் தலைப்பொங்கலுக்கு அவ ஊர்ல போய் பொங்கல் வைக்க வேண்டாமா இவகிட்ட எப்படிச் சொல்லி புரிய வைக்குறது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே
சத்யன் ஓடி வந்தான்.

"அம்மா அம்மா "

சத்தம் கேட்டு அஞ்சனாவின் அப்பாவும் வந்தார்.

"என்னப்பா"

"பிரகாஷ்க்கு கையில தீக்காயம் பட்டுடுச்சு.. GH ல அட்மிட் பண்ணியிருக்கு. அஞ்சு அஞ்சுன்னா புலம்பிட்டு இருக்கான் அதான்..." என்பதற்குள் மாடியில் இருந்து அவளே இறங்கி வந்தாள்.

"என்ன சொல்லுறீங்க தம்பி"

"ஆமாம்மா நேத்து நைட் போன் பேசி முடிச்சுட்டு வீட்டுக்குள்ள வர்றேன். கொட்டகை தீப்பிடித்து எரிஞ்சுட்டு இருந்தது. காளையனை சுத்திலும் நெருப்பு. அவனைக் காப்பாத்த உள்ள போனவனுக்கு கையில தீக்காயம் பட்டுடுச்சு"

"அச்சோ காளைக்கு ஒன்னும் ஆகலையேப்பா"

"அவன் நல்லா இருக்கான் ம்மா.. லேசா கால்கிட்ட மட்டும் கொஞ்சம் புண்ணாயிருக்கு"
என்றதும் அஞ்சுவிற்கு கண்ணீர் வந்துவிட்டது.

"அழாத ம்மா அவனுக்கு ஒன்னும் இல்லை. வாம்மா ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று அவன் சொல்லவும் அனைவரும் கிளம்பினார்கள்.

"எப்படி அண்ணா தீப்பிடிச்சது" கண்ணைத் துடைத்தபடி அவள் கேட்க "எல்லாம் அந்த மாணிக்கம் பண்ண வேலை ம்மா" என்றான் அவன்.

"அவனை சும்மாவா விட்டீங்க"

"அதெல்லாம் உன் புருசன் பயங்கர கவனிப்பு கவனிச்சுட்டான். அவனும் ஹாஸ்பிட்டல்ல எலும்பு நொறுங்கிப் போய்ப் படுத்துக் கிடக்கான்"

ஹாஸ்பிட்டலுக்குள் வந்தவளுக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.

இருந்தும் சமாளித்துக் கொண்டு அவன் அருகே சென்றாள்.

அவனது கைகள் இரண்டும் மருந்து இடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவள் "பிரகாஷ்" என்று கண்ணீர் விட்டபடி அவன் அருகே சென்று அமர்ந்தாள்.

"அஞ்சு"

"வலிக்குதா"

"இங்க வலியில்ல"

"பின்ன?"

"சொல்லணுமா உனக்குத் தெரியாது"

"பிரகாஷ்"

"ஏன் டி இப்படிப் பண்ண. எப்பிடி டி என்னை விட்டு உன்னால நிம்மதியா இருக்க முடியுது?"

வாயிலே ஒரு அடி போட்டாள்.. விம்மிக் கொண்டே.

"நானாடா நிம்மதியா இருந்தேன். நீ பார்த்தயா.. வலி எனக்கும் இருந்தது. என்னால எப்படி உன்னை விட்டு நிம்மதியா இருக்க முடியும்"

"அப்பறம் ஏன் என்னை விட்டு போன"

"போகாம உனக்கு வப்பாட்டியா இருக்க சொல்லுறயா"

"அடியேய் என்னப் பேச்சு பேசுற. வாயைக் கழுவுடி" கோபத்தில் ஓங்கிய கையை இறங்கிவிட்டு அவன் கத்த அவளோ "பின்ன.. ஏய் வித்யா ஒரே ஒரு உம்மா வேணும். ஒன்னு மட்டும் தான் ப்ளீஸ் ப்ளீஸ்னு உன் வாட்சப்ல மெஸேஜ் இருந்தது. அந்தப்பக்கம் இருந்தும் கிஸ் வந்தது இருந்தது...

அப்பறம்

ஐ லவ் யூ வித்யா

ஐ லவ் யூன்னு இரண்டு பேரும் மாறி மாறிப் பேசிட்டு இருந்தீங்க. இதையெல்லாம் பார்த்துட்டு உன்கூட வாழ சொல்லுறயா" என்றதும் சிரித்தான் அவன்.

"என்ன சிரிப்பு என்னால எல்லாம் அப்படி மானங்கெட்டு உன்கிட்ட வாழ முடியாது"

"ஹ்ஹா ஹ்ஹா"

"சிரிக்காத"

"வருதே"

"எனக்கு கோபம் வருது. புண் கையை அழுத்திடுவேன்"

"ஹ்ஹா... ஓகே ஓகே நீ போய் சத்யாவைக் கூப்பிடு"

"எதுக்கு?"

"சொல்லுறேன் கூப்பிடு"
அவள் சென்று "சத்யா அண்ணா! உங்களை கூப்பிடுறாங்க" என்றாள்.

"யாரு டாக்டரா"

"இல்லை. உங்க ப்ரண்ட்"

அவனோ "வித்யா இரு பிரகாஷ்கிட்ட பேசிட்டு வந்து பேசுறேன்" என்று போனை வைக்க அப்போதுதான் அவளுக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது..

இருந்தும் அப்படியே அமைதியாய் வர "டேய் சத்யா கடைசியில நீதான்டா எனக்கு வில்லன்" என்றான் பிரகாஷ்.

"என்னடா சொல்லுற"

"நீ வித்யாகூட நடத்தியிருந்த பேச்சுவார்த்தையை பார்த்துட்டுதான் அம்மணி என்னை விட்டுட்டு ஊருக்குப் போயிருக்கா"

"அய்யோ சிஸ்டர் என் போன் ரிப்பேராகிடுச்சு. அதான் சிஸ்டர் இவன் மொபைலை வாங்கி பேசியிருந்தேன். எப்பவும் சாட் பண்ணதை டெலீட் பண்ணிடுவேன். அன்னைக்குப் பண்ணலை. அதைப் பார்த்துட்டா இவ்வளவு பெரிய பிரச்சனை பண்ணியிருக்கீங்க.. அய்யோ கேட்டுருக்கலாமே சிஸ்டர்" என்று அவன் நிசமாகவே வருந்த
"நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் சாரிண்ணா " என்றாள் அவளும்.

"டேய் சத்யா நீ போடா"

"பிரகாஷ் சாரி டா.."

"போ டா போடா" என்று அவனை அனுப்பிவிட்டு அவளை நோக்கினான்.

அவளுக்குள் குற்றவுணர்வு தலைதூக்கியதால் தலைநிமிராமல் அமர்ந்திருந்தாள்.

"அஞ்சு"

"ம்ம்"

"என்னை நிமிர்ந்து பாரு"

"சாரி பிரகாஷ்"

"ஷ்ஷ் அதைவிடு.. இந்த மாதிரியான சண்டை இல்லாத காதல் ஏது? என்ன? என் பக்கத்துல இருந்து என்னை தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சுட்டு வித்யா யாருடான்னு கேட்டுருந்தா இவ்வளவு வலி இருந்திருக்காது இல்லையா?"

"புரிஞ்சுக்கிட்டேன்"

"அஞ்சு ஐ லவ் யூ.. இன்று நமது காதலுக்கு வயது இரண்டு. கடந்த வருடம் இதே நாள் நாம இரண்டு பேரும் பார்த்துக்கிட்டோம். அன்னைக்கு ஆரம்பிச்ச நம்ம காதல் இடையில பிரிவு வந்த பிறகும் இதே நாள்ல மறுபடியும் சேர்ந்திருக்கு"

"பிரகாஷ் இந்த ஒருவருச கம்ப்ளீசனுக்காக உங்களுக்கு ஒரு கிஃப்ட் இருக்கு..."

"என்ன?"

"காளையன் கூட விளையாடுறதுக்கு ஒரு காளை வரப்போகுது.."

"என்ன???" சட்டென்று நிமிர்ந்தமர்ந்தவன் அவளை இழுத்துக் கொண்டு அருகே நெருக்கமாய் கிசுகிசுக்க "ஆமா நேத்து தான் செக் பண்ணேன்.." என்றாள் அவளும் பதிலுக்கு கிசுகிசுப்பாய்.

"அஞ்சு அஞ்சு" என்று அவளை கொஞ்ச நினைத்தபோதும் இருக்கும் சூழ்நிலை அவனுக்கு அதுக்கான உரிமையைத் தரவில்லை.

அந்த காலமும் நேரமும் இன்னும் சிறிது நேரத்தில் அவனுக்கு வாய்த்துவிடும். அதன்பின் அவன் வீட்டுச் சுவர்கள் மறுபடியும் வெட்கத்தில் சிவக்கப் போகிறது.

இனி பிரகாஷின் மனம் இதயத்திலே தீப்பிடித்து என்று பாடாமல்

சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை..
வா வா அலைக்கடல்
சிறுதுளி வா வா..
பெண்ணே வா வா
எரிமலை சிறு பொறி வா வா..
கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா

என்று பாடிக் குதூகலிக்கட்டும்....

***சுபம்***
 
Marimathi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 21, 2023
Messages
1

ரொம்ப அருமையான ஒரு கதை கணவன் மனைவிக்குள் நடக்கிற எதார்த்தமான லவ்வ அவ்ளோ அழகா சொல்லி இருக்காங்க ரொம்ப அற்புதமா இருந்துச்சு கதை
 
Joined
Jan 3, 2023
Messages
76
அருமை சிஸ்டர்.

காளையனின் பாசமும் நாயக நாயகியரின் பாசமும் அழகாக இருந்தது.

வாழ்த்துகள்💐💐💐 வாழ்க வளமுடன்
நன்றி சிஸ்டர் ❤️🥰❤️🥰
 
ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
115
தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியை அதிகமாக நேசிக்கும் கணவன், அவளது பிரிவிற்கான காரணம் அறியாமல் ஏங்குவதும், கணவனைப் பிரிந்தும் அவன் நினைவாக வாடும் நாயகியுமாக சிறுகதை நகர்கிறது.

அட இத்தனைக் காதலை மனதில் கொட்டி வைத்திருப்பவர்கள் எதுக்குப்பா இப்படி பிரிஞ்சு போயிருக்காங்க என்று நினைத்துக் கொண்டே படித்தால்... இதுக்காடா இத்தனை அழுகையும், பிரிவும், ஏக்கமும் என்று எண்ணத் தோன்றியது.

காளையனின் பாசமும், நாயக நாயகி அறிமுகமும் நல்லா இருந்தது. சிறுகதையிலும் வில்லனாக ஒருவன் வந்து வில்லங்கம் செய்கிறான்.

வாய் விட்டு பரிமாறாமல் இருக்கும் உறவு பிரிவில் தான் முடிகிறது.
எந்தவொரு பிரச்சனைகளையும் நேருக்கு நேராக பேசி தீர்வு காணா விட்டால் கண்ணீரும், சோகமும் தான் பரிசாக கிடைக்கும் என்பதை சிறுகதையின் வாயிலாக அழகாக சொல்லியிருக்காங்க.

சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்துப் பாருங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐
 
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰
 
Kanavu Kadhali Ruthitha

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 16, 2021
Messages
5

ஹய்.. செம பீல்... சூப்பர்க்கா... வெற்றிபெற வாழ்த்துகள்...
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
சூப்பர் சூப்பர் சகி 😍♥️♥️♥️♥️♥️♥️
தாம்பத்தியருக்குள் ஊடல் கூடல் இல்லனாதான் சுவாரஸ்யம் இருக்காது 😄😄😄😄😄😄😄என்னதான் நல்ல புரிதாலோட கணவன் மனைவி இருந்தாலும் ஒரே ஒரு கடுகளவு விஷயம் பூதகரமான பிரச்சனையா மாறிடுது. 😄😄😄😄இப்போ இருக்க காலத்துக்கு போன் தான் முதல் எதிரி 😁😁😁😁😁😁😁
 
Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
வாவ் சூப்பர் சிஸ். பிரகாஷ் அஞ்சனா காதல், முதல் ஊடல் வரை எல்லாமே சூப்பர். ஃப்ரெண்டே வில்லனாவனு எதிர்ப்பார்க்கலை சூப்பர் ❤️
 
Joined
Jan 3, 2023
Messages
76
சூப்பர் சூப்பர் சகி 😍♥️♥️♥️♥️♥️♥️
தாம்பத்தியருக்குள் ஊடல் கூடல் இல்லனாதான் சுவாரஸ்யம் இருக்காது 😄😄😄😄😄😄😄என்னதான் நல்ல புரிதாலோட கணவன் மனைவி இருந்தாலும் ஒரே ஒரு கடுகளவு விஷயம் பூதகரமான பிரச்சனையா மாறிடுது. 😄😄😄😄இப்போ இருக்க காலத்துக்கு போன் தான் முதல் எதிரி 😁😁😁😁😁😁😁
ஹா ஹா உண்மைதான் ம்மா.. மிக்க நன்றி❤️❤️❤️
 
Joined
Jan 3, 2023
Messages
76
வாவ் சூப்பர் சிஸ். பிரகாஷ் அஞ்சனா காதல், முதல் ஊடல் வரை எல்லாமே சூப்பர். ஃப்ரெண்டே வில்லனாவனு எதிர்ப்பார்க்கலை சூப்பர் ❤️
மிக்க நன்றி மா ❤️❤️❤️🥰
 
Top