Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 22

காதல் கசக்குதைய்யா – 22

by Vathani S

வர வர காதல் கசக்குதைய்யா – 22

“ஓக்கே.. ஓக்கே வைலன்ட் வேண்டாம்.. ஐம் சரண்டர்ட்” என தன் மேல் விழுந்து பிராண்டிக் கொண்டிருந்த நிக்கியைத் தள்ளிவிட்டு ஆரு சொல்ல,

“ம்ம்..” என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய நிக்கி பக்கத்திலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“ஓகே ரிலாக்ஸ்.. இப்போ ஓக்கே தான, சொல்லு என்ன பிரச்சினை உனக்கு. ஆகாஷுக்குத் தான் உங்க லவ் மேட்டர் தெரியுமே, எப்படியும் அவன் ஓகே சொல்லப் போறது இல்ல. அப்புறம் என்ன பயம் உனக்கு..” என ஆரணி இப்போது சீரியஸ் மோடிற்கு வந்துவிட

“ம்ம் அந்த பண்டாரம் ஓக்கேன்னு தான் சொல்லிடுச்சு,” என பாவமாக சொல்ல

என்ன சொல்கிறாள் என்று புரியாமல் “நிக்கி.. தெளிவா சொல்லு..” என இப்போது ஆரு அரட்ட,

“ஆகாஷுக்கு ட்ரெயினிங்க் செட்யூல்ட் முடிஞ்சது. அவன் டூ மந்த்ஸ் லீவ்ல வர்ரான். நெக்ஸ்ட் போஸ்டிங்க் வேற நார்த் சைட் தான் போடுவாங்கன்னு தெளிவா சொல்லிட்டாங்க போல, சோ இவனுக்கு மெரேஜ் செஞ்சு அனுப்பிடலாம்னு என் அம்மாவும் அத்தையும் முடிவு செஞ்சி வீட்டுல பேசி இப்போ ஃபிக்சே பண்ணிட்டாங்க. எப்படியும் ஆகாஷ் ஒத்துக்க மாட்டான்னு நானும் தைரியமா இருந்தேன். ஆனா அவன் உன்னோட லவ் நீதான் காப்பாத்திக்கனும், நான் ஹெல்ப் பண்ணுவேன்னு நீ எப்படி எதிர்பார்க்குற, உன்னை வேண்டாம்னு எல்லாம் வீட்டுல என்னால பேச முடியாதுன்னு பட்டுன்னு சொல்லிட்டான்..” எனும் போதே நிக்கிக்கு அழுகை வந்துவிட்டது.

“ஓ..” என்று யோசனையாக இழுத்த ஆரு, நிக்கி அழுவதைப் பார்த்து, அவளை சமாதானம் செய்யும் பொருட்டு, “விடு மச்சி பார்த்துக்கலாம், அதுதான் அங்கிளும் ஆன்டியும் வராங்க தானே.. பேசிக்கலாம் டா. தப்பா எதுவும் நடக்காதுனுதான் எனக்குத் தோனுது. டோன்ட் வொரி. டோன்ட் லாஸ் யுவர் ஹோப்..” என்று தோழியை சமாதானம் செய்தாலும் முகம் யோசனையாக இருந்தது.

சில நிமிட யோசனைக்குப் பிறகு “நிக்கி இதை நாம மட்டும் முடிவு செய்ய முடியாது. ஃபர்ஸ்ட் ஆதனுக்கு பேசு. அவர் என்ன சொல்றாருன்னு கேளூ, அப்புறம் மத்ததை யோசிக்கலாம்.” என்றவள்,

“நீ ரெஃப்ரஷ் ஆகிட்டு வா, தோட்டத்துக்குப் போகலாம். பெரியவங்க அங்கதான இருக்காங்க. எப்படியும் ஆதித்தான் இதைப்பத்தி அவரோட அப்பாக்கிட்ட பேசிருப்பாருன்னு தோனுது. சோ பெருசா எந்தப் பிரச்சினையும் இருக்காது..” என ஒருவழியாக பேசி சமாதானம் செய்து அவளையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு நடந்தாள்.

தோட்டத்தில் எல்லோரும் சாப்பிட்டு ஒரு மரத்திற்கடியில் அமர்ந்திருந்தனர். ஆதியும், ஆதனும், கதிரும் ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டிருப்பது போல இருந்தது. சாப்பிட்ட பாத்திரங்களைக்  கழுவுவதற்காக ரம்யாவும் பவித்ராவும் தண்ணீர் செல்லும் வாய்க்காலில் நின்றிருந்தனர்.

இதுதான் தோழியுடன் பேச சரியான தருணம் என்று உணர்ந்த பவித்ரா “ரமி..” என்று அழைக்க, பவித்ராவின் அந்தக் குரலுக்கு ரம்யா திரும்பக் கூட இல்லை. கொண்டுவந்த பாத்திரங்களை வேக வேகமாகக் கழுவிக் கொண்டிருந்தார். அவரது வேகத்திலேயே அவரின் கோபம் புரிய, பவித்ராவிற்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்றே புரியவில்லை.

“ரமி.. ப்ளீஸ் என் கூட பேசுடி.. கோபமா இருந்தா ரெண்டு அடிகூட அடிச்சிக்கோ, ஆனா இப்படி அமைதியா இருக்காதடி, கஷ்டமா இருக்கு. நான் செஞ்சது எல்லாமே தப்புத்தான். எனக்கு இருந்த பயத்துலயும், குற்ற உணர்ச்சிலயும் அப்படி நடந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு உங்க முகத்துல முழிக்கக்கூட எனக்கு  தைரியம் இல்லடி.. ரமி ப்ளீஸ் என்னை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா..” என கரகரத்தக் குரலில் உடைந்து போய் கேட்க,

“நான் எதுக்கும்மா உன்னை புரிஞ்சிக்கனும், இல்ல மன்னிக்கனும். நீங்க யாரு எங்களுக்கு.? ஒருவேள இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்ணுக்கு மாமியாரா ஆகப்போறதுனால வேனா நீங்க பேசுறதைக் கேட்கலாம். ஆனா நீங்க உரிமயா பேசுற மாதிரி வேற எந்த உறவு முறையும் நமக்குள்ள இல்ல..” எனப் பட்டென்று சொல்ல, பவித்ரவிற்கு முகமே விழுந்துவிட்டது. அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல், ஒன்றும் பேசாமல் கழுவிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டார்.

தோழி நகர்வது தெரியவும் அதுவரைக் குனிந்து கொண்டிருந்த ரம்யா நிமிர்ந்து சோர்வாகச் செல்லும் பவித்ராவைப் பார்த்தார். ‘சாரி பவி எனக்கு உன்மேலக் கோபம் இருந்தது தான். ஆனா இப்போ இல்ல. என் வீட்டுக்காரர் உங்கிட்ட பேசாம நான் பேச முடியாது. அவர் என்னைக்கு உங்கிட்ட சாதாரணமா பேசுறாரோ அப்போத்தான் நானும் உன் கூட பேசுவேன். இது அவருக்காக நான் எடுத்த முடிவு..’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவர், மீதமிருந்த பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு கணவரை நோக்கி நடந்தார்.

“முகுந்தா.. சங்கர் ரொம்ப நல்ல மனுஷன் தான், ஆனா அவங்க குடும்ப விஷயம் எப்படின்னு தெரியாம நாம பேச முடியாது. ஒருவேளை ரெண்டு பேருக்குமே கல்யாணம் முடிச்சிடலாம்னு சின்ன வயசுல இருந்தே பேசி வச்சிருப்பாங்களோ என்னவோ..” என பாண்டியன் யோசனையாகச்  சொல்ல,

“ம்ம்… இருக்கலாம் பாண்டி.. நம்மக் கூட கதிருக்கும், ஆருவுக்கும் பேசி வைக்கலையா.. பிறகு அவங்களுக்கு இஷ்டம் இல்லன்னு வேண்டாம்னு சொல்லிட்டோம். சங்கரும் அப்படி கேட்டு முடிவு செஞ்சா நல்லா இருக்கும். வரட்டும் பேசிப் பார்ப்போம். பிறகு முடிவு செய்வோம்..” எனக் கேசவும் சொல்ல, நணபர்கள் இருவர் சொன்னதையும் கேட்டாலும் முகுந்தனின் மனம் மகனை நினைத்து அடித்துக் கொண்டது. அவன் எப்படி தோல்வியைத் தாங்குவான்.

ஒரு காதல் திருமணத்தால் பிரிந்த குடும்பம் இப்போது தான் மீண்டும் சேர்ந்திருக்கிறது. இதில் மீண்டும் அதே போல ஒரு சூழ்நிலை என்றால் அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. பல பிரச்சினைகளை சுலபமாகத் தீர்வுக் கண்டு கடந்து வந்தவரால், இந்தப் பிரச்சினையில் தீர்வு காண முடியவில்லை. இது அவர் மட்டும் முடிவெடுக்கக் கூடிய பிரச்சினையும் இல்லை. நண்பர்கள் சொல்வது போல அவர்களும் வரட்டும் பேசிப் பார்ப்போம் என மனதை சமாதானம் செய்து கொண்டார்.

சற்று தூரத்தில் முத்துலிங்கமும், குருவம்மாவும் பேத்திகளோடு வருவது தெரிய, கதிர் ஓடிச் சென்று முத்துலிங்கத்தை கைப்பிடித்து அழைத்து வந்தான். வயதின் முதிர்வு அதனால் தான் என்று கதிரையேப் பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனிடம் சொன்னார் கேசவ்.

அவரும் “ம்ம்” என்றுத் தலையை அசைத்துக் கொண்டார். கதிரோடு வந்த பெரியவர் தன் கையில் இருந்த கம்பை வைத்து ஆதித்யனின் முதுகில் அடித்து, “ஏன் துரைக்கு வர முடியாதோ..” என நக்கலாகக் கேட்க,

“நான் ஏன் வரனும்.. நான் தான் உங்க பேரனே இல்லையே..” எனப் பதில் வந்து சேரும் முன் மீண்டும் ஒரு அடி வந்து விழுந்தது.

“தாத்ஸ்.. இப்போ எதுக்கு என் அண்ணனை அடிக்கிறீங்க.. நீங்க தான அவனை வீட்டுக்குள்ள கூட வரக்கூடாது, நீ என் பேரனே இல்லன்னு எல்லாம் டைலாக் விட்டீங்க. இப்போ என்ன புதுசா பேரன் பேத்தின்னு சொல்லிட்டு..” என ஆதன் முந்திக் கொள்ள,

‘இவன் ஒருத்தன்’ என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்ட ஆதி, “விடு ஆது..” எனத் தம்பியைச் சமாதானம் செய்ய,

“என்ன விடு.. இவர் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் எப்படி பேசினார். இன்னைக்கு வந்து பேரன்னு சொல்லி செல்லம் கொஞ்சிட்டு இருக்கார்..” எனக் கடுப்பாகச் சொல்ல

“அதுதான் விடுன்னு சொன்னேனே ஆது.. தாத்தா வயசுல பெரியவர் அவரை போய் மரியாதை இல்லாம பேசாத..” என ஆதித்யன் சேம் சைட் கோல் போடவும், ஆதனுக்கு இருவர் மீதும் சந்தேகம் வந்துவிட்டது. இப்போது சுற்றியுள்ள எல்லோரையும் பார்க்க எல்லோருமே அதே சந்தேகத்துடன் பார்க்க, கதிர் மட்டும் நைசாக நழுவப் பார்க்க, அதைக் கண்டுகொண்ட ஆதி அவன் பின்புற சட்டைக் காலரைப் பிடித்து நிறுத்த,

“டேய் விடுடா… நான் போலிஸ்காரன்டா.. இவங்ககிட்ட எல்லாம் அடி வாங்கினா என் வருங்காலம் அசிங்கமா பேசும்டா..” என உளறிக் கொட்ட, இப்போது மொத்தக் குடும்பமும் மூவரையும் ரவுன்ட் கட்ட, அதிலும் ஆருவும் ஆதனும் கீழேக் கிடந்த இளநீ மட்டையை கையில் எடுக்க,

“ஆதி விடுடா.. ஆருவ பத்தி உனக்குத் தெரியாது. அவ என்னை அடிக்காம விடமாட்டா.. விடுடா விடுடா துரோகி” எனக் கத்திக் கொண்டே அவனிடமிருந்து பிரிந்து ஓட, அதற்காகவே காத்திருந்தது போல ஆரு தன் கையில் இருந்த இளநீ மட்டையை எறிந்துவிட்டு, மீண்டும் ஒன்னைக் கையில் எடுத்துக் கொண்டு கதிரைத் துரத்த,

இந்தப் பக்கம் ஆதனோ, “என்ன நடந்துச்சுன்னு ஒழுங்க சொல்றீங்க.. நீங்க மூனு பேரும் சேர்ந்து என்ன ப்ளான் பண்ணீங்க சொல்லு.. இல்ல இப்போ உன் மண்ட உடையும்” என கையில் இருந்த மட்டையை ஒருமுறை மேலே எரிந்துப் பிடித்து ஆதியை நோக்கி எரியப் போக, “டேய் வேண்டாம்..” என ஆதி ஓட ஆரம்பித்தான்.

சிறியவர்கள் ஒவ்வொரு பக்கம் ஓட இப்போது பெரியவர்கள் எல்லாம் முத்துலிங்கத்தைப் பார்த்தனர். அதிலும் குருவம்மா கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார். மனைவியைப் பற்றித் தெரிந்த முத்துலிங்கமோ அவர் பக்கம் திரும்பக் கூட இல்லை.

மகனைப் பார்த்து “பாண்டி.. பேரனுங்க நம்ம ஊருக்கு வரதுக்கு முன்னாடியே பெரிய பேரன் கதிர் மூலமா என்னை தேனிக்கு வர வச்சு பேசினான். அங்க இருக்குற சூழ்நிலையைப் பத்தி சொல்லி, ஊர்ல எப்படி என்ன.? பெத்தவங்கள கூப்பிட்டு வரட்டுமான்னு கேட்டான்.”

“ஆனா அதுக்கு முன்னாடி என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டான்டா. நான் எப்படி உணர்ந்தேன்னே தெரில, என் மனசு அப்படியே உருகிடுச்சு சாமி, என் அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு அவங்க இதுவரை அனுபவிச்ச தண்டனையே போதும். இனியும் தண்டனை கொடுக்காதீங்க, அம்மா உங்க எல்லாரையும் நினைச்சு நினச்சு ரொம்பவே உடைஞ்சிப் போயிட்டாங்க. அவங்களூக்காகத் தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன். தயவுசெய்து சம்மதம் கொடுங்கன்னு கேட்டான்.”

“எனக்கும் என் மகளைப் பார்க்கனும்னு தோனுச்சு. இதுவரை இவங்களப் பத்தி நமக்கு ஒன்னும் தெரியல, அதனால பேசாம இருந்தோம். ஆனா தெரிஞ்ச பிறகு சும்மா இருக்க முடியல ராசா. எம் பொண்ண உடனே பார்க்கனும் போல வந்துச்சு. ஆனா நீ எப்படி நடந்துப்ப, உன் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியாதுல, அதனால தான் எனக்குப் பிடிக்காத மாதிரி நடிச்சா நீ சம்மதம் சொல்லிடுவன்னு நினைச்சேன்.”

“ஆனா அம்மாளுக்கு உடம்புக்கு முடியாம  எல்லாம் போகும்ன்னு நான் நினைக்கவே இல்லைய்யா.. அவளுக்கு முடியாம போனதும் எனக்கு குற்ற உணர்ச்சியா போச்சு. உங்கிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணிருக்கனும்னு புத்தி சொல்லிச்சு..” என வார்த்தையை விடாமல் சொல்லிக் கொண்டே வந்தவர் இப்போது மனைவியைப் பார்க்க, அவரோ இப்போது கோழி திருடின திருடன் போல முழிக்கவும், முத்துலிங்கத்திற்கு சந்தேகம் வந்துவிட்டது.

“ஏய் கெழவி உன் முழியே சரியில்லையே, நீ என்ன திருகுதாளம் பண்ண..” என சரியாகக் கேட்க, இப்போடு எல்லோர் பார்வையும் குருவம்மாவை நோக்கித் திரும்ப, குருவம்மா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டார்.

அவரது முக பாவத்தைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்புத்தான். ஆனால் வெளிக்காட்டினால் மரியாதையாக இருக்காது என்பதால் அமைதியாக பார்க்க, ஆனால் நிக்கிக்கு அப்படியெல்லாம் இல்லை போல, நேராக் குருவம்மாவிடம் வந்தவள் “அம்மச்சி அன்னைக்கு நெஞ்சுவலி வந்த மாதிரி நடிச்சியா.. அவ்வவ்வ.. இதெல்லாம் பெரிய மனுஷங்க செய்ற வேலையா.? அன்னைக்கு நீ ஆசுபத்திரில இருந்தப்ப எல்லாரும் எப்படி துடிச்சாங்க்.. கெழவி உன்னை..” எனப் பல்லைக் கடிக்க

“அடி ஏன் தொடப்பக்கட்ட.. யாரப் பார்த்து கெழவிங்குற..” என எகிற

“ஏன் உன்னைப் பார்த்துதான். ஏன் எனக்கு என்ன பயமா..? இரு தேங்காயோட போன உம்பேத்தி வரட்டும், உன் மண்டைல போட சொல்றேன்..” என பதிலுக்கு அவளும் எகிற

“எனக்கு என்ன பயமா.. அதுவும் அவக்கிட்ட. என் பேரனுங்க இருக்கானுங்க தெரியும்ல. இவளை எல்லாம் வந்து பாருன்னு சொல்லுவானுங்க, ப்போடி அங்குட்டு.. வந்துட்டா பெருசா பயம் காட்ட..” என நிக்கியிடம் வாக்குவாதம் செய்தபடியே மகனைப் பார்க்க, பாண்டியனுக்கும் குருவம்மாவிற்கும் இடையில் குருவம்மாவை முறைத்தபடியே கையில் மட்டையுடன் நின்றிருந்தாள் ஆரணி.

“ஆத்தீ.. இவ எப்போ வந்தா” என  நெஞ்சில் கைவைத்தபடியே பின்னால் சாய, அவரை வேகாமாகப் பிடித்துக் கொண்டான் கதிர்.

“அப்பத்தா நீயுமா இந்த ஆபரேசன்ல இருக்க.. உன் பேரெல்லாம் லிஸ்ட்ல இல்லவே இல்லையே..” என நேரம் காலம் தெரியாமல் கதிர் கௌன்டர் கொடுக்க,

“அட எடுபட்ட பயலே, எரியிற தீயில எண்ணெய ஊத்தாதடா.. அவளே முறைச்சே என்னைய முழுங்கிடுவா போல இருக்கு, நீ வேற ஏன்டா..” என புலம்ப, இதற்கு மேல் தாங்கமாட்டார் என அறிந்த பாண்டியன், வழக்கம்போல “ஆரு..” என அதட்ட, அவளும் வழக்கம்போல “எஸ் ப்பா..” என்றவள்  அமைதியாகப் போய் தனியாக நின்று கொண்டாள்.

ஆதித்யன், அப்பத்தா, அப்புச்சி  என மூவர் மேலும் கடுங்கோபம். ஏனோ தான் தனியாகி விட்டது போல ஒரு உணர்வு. அவளால் அங்கு நிற்கவே முடியவில்லை. பாண்டியனை பார்த்தவள் “ஷல் ஐ மூவ் ப்பா ப்ளீஸ்..” என்று அவரது பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் விறுவிறுவென நடந்துவிட்டாள்.

அவள் சென்ற நிமிடங்களில்  ஆதித்யனும் ஆதனும் வந்து சேர்ந்தனர். போகும் போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை என்று இருவருக்கும் புரிந்தது. ஆதித்யன் யோசனையாக எல்லோரையும் பார்க்க, எல்ளோர் முகத்திலும் பலவிதமான உணர்வுகள் வந்து வந்து போய் கொண்டிருந்தது. யாரிடம் கேட்பது என்பது போல சுற்றிலும் பார்வையை ஓட்ட, மொபைலை நோண்டிக் கொண்டிருந்த கதிர் தான் பட்டான்.

அவன் முகமும் பதட்டமாகத்தான் இருந்தது. “ஷிட்” என்றுவிட்டு மொபைலை அனைத்த கதிரோ, பாண்டியனிடம் “மாமா நீங்க வாங்க நான் போறேன்.. போன் அட்டென்ட் பண்ண மாட்டேங்குறா..” என்றவன் நொடியும் தாமதிக்காமல் வரப்பில் இறங்கி ஓடினான்.

You may also like

Leave a Comment

About Me

Featured