Home Antiheroதளிர் – 62

தளிர் 62

“ஐம் சாரி நிசா… உங்கிட்ட மறைக்கணும்னு எதுவும் பண்ணல, விக்ரம் தான்…” என இழுத்து நிறுத்த,

“எனக்கு புரியுது சாரு, நீ எந்த விளக்கமும் சொல்லணும்னு அவசியம் இல்லை.” என்றவள், “எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் சாரு, சடனா எந்த முடிவும் எடுக்க முடியாது, இல்லையா?” எனவும்,

“கண்டிப்பா நிசா, நல்லா யோசிச்சு, நல்ல முடிவா எடு. ஆனா நீ எந்த முடிவை எடுத்தாலும் தசிக்குட்டியை மனசுல வச்சுட்டு எடு. இன்னும் எவ்வளவு நாள் ஓடிக்கிட்டே இருப்ப? இப்ப குட்டிம்மா குழந்தை, அதனால ஒன்னும் பெருசா தெரியல. ஆனா அவள் அப்படியேவா இருப்பா? வளர்ந்து எல்லாம் புரியும் போதும் ஓடிட்டே இருக்க முடியுமா? நீ ஓடக்கூடாது, மத்தவங்களை ஓட விடணும். இதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு யோசிச்சு முடிவெடு.” என்ற சாரு, நிசாவை தனியே விட்டுச் சென்றாள்.

வக்கீல் நோட்டிசை பார்த்ததும் நிசாவிற்கு முதலில் அதிர்ச்சிதான். எவ்வளவு திமிர் என்று கட்டுக்கடங்காத கோபம்தான். செய்வதையெல்லாம் செய்துவிட்டு, தன் மகள் என உரிமை கொண்டாடுகிறான் என்று ஆத்திரம்தான். இந்த எண்ணம் எப்படி வந்தது? அன்று முகத்தைக்கூட பார்க்காமல், இன்று என் குழந்தை என வர என்ன காரணம் என பல யோசனைகள்.

நிதானமாய் யோசிக்கும் போது இதில் வேறு எதுவோ இருப்பது போல் தோன்றியது. அவன் ஏன் தன்னைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்? குழந்தைக்காக என்றால் சரிதான், ஆனால் அவன் செயல்பாடுகள் குழந்தைக்காக மட்டுமே என்று காட்டவில்லையே! வேறு என்ன? வேறு என்ன? என யோசனைகள் மண்டையைப் போட்டு சூடேற்றியது.

இப்படி தூரமாக இருந்து புலம்பித் தவிப்பதற்கு, அருகில் இருந்து அவனைக் கண்காணித்து, அவனை வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு அமைந்தால் என நினைத்தவளின் மூளை, சட்டென்று அந்த இடத்தில் நின்றது. வஞ்சம் தீர்த்தால்… அடுத்து எதையும் யோசிக்கவில்லை. வஞ்சம் தீர்க்க வேண்டும் என்று முடிவே எடுத்துவிட்டாள்.

உடனே ரவிக்கு அழைத்து, “ரவிண்ணா எனக்கு அங்கே வரணும், எங்க வீட்டை கொஞ்சம் ரெடி பண்ண முடியுமா?” என கேட்டாள்.

“ஹேய் நிசாம்மா, நீதானா? நம்பவே முடியல, நீ எனக்கு கால் பண்ணிருக்கியா?” என ஆச்சரியம் அடைந்தவன், “அதெல்லாம் சூப்பரா பண்ணிடலாம். நீ எப்போ வர, உன் ப்ளான் என்ன?” என ரவி பதில் சொன்னாலும், அவனின் யோசனை வேறுபக்கம் ஓடியது, நரேனிடம் கேட்காமல் தன்னிடம் கேட்கிறாளே என்று.

“ப்ளான் எல்லாம் எதுவும் இல்ல ண்ணா, எனக்கு அங்கே வரணும். வந்த பிறகுதான் யோசிக்கணும்.” என்று ரவிக்கு பதில் கொடுத்தாலும், அவளின் மூளை புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொண்டுதான் இருந்தது.

“ஓகே நிசாம்மா, நான் எல்லாம் அரேன்ஞ் பண்ணிடுறேன், அத்தையை அங்கே போய் பார்க்க சொல்லிடுறேன். எதாவது சேன்ஞஸ் பண்ணணும்னா சொல்லிடு, கையோட அதையும் பண்ணிடலாம். நீ வர்றதை அத்தைக்கிட்ட சொல்லிட்டியா, அவங்க என்ன சொன்னாங்க?” என்றான். அந்த குரலில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

“சேன்ஞஸ் ஒன்னும் செய்ய வேண்டாம் ண்ணா, அப்படியே இருக்கட்டும். அப்பா ஞாபகமா அது மட்டும்தானே இருக்கு.” என்றவள், சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “ரேணும்மாவுக்கு இன்னும் பேசல, அவங்க என்னோட முடிவுல தலையிட மாட்டாங்க. என் முடிவுதான் அவங்க முடிவு. அதனால இதைப்பத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனா வர்றேன்னு கண்டிப்பா சொல்லணும்.” என்றாள் அவளும்.

“சரிடா, நான் இங்க நம்ம கான்ட்ராக்டர்கிட்ட பேசி பெயின்டிங், ரிப்பேரிங் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு சொல்றேன். அதுக்குப் பிறகு கிளம்பு, கேஸ் ஹியரிங் டேட் எப்ப?”

“நெக்ஸ்ட் மன்த் டென்த் தான், நான் எய்ட்த் அங்க இருக்குற மாதிரி வருவேன். அதுக்குள்ள ஒர்க் முடிஞ்சிடும் இல்ல?”

“பக்காவா முடிச்சிடலாம், அது பிரச்சனை இல்லை. கேஸ் பத்தி நீ என்ன யோசிக்குற நிசாம்மா? விக்ரம் இந்த கேசை சும்மா விடமாட்டான்.” என்றான் ரவி தகவலாக.

“விட வேண்டாம், விட்டுட்டா இந்த நிசப்தி யாருன்னே அந்த விக்ரமுக்கு தெரியாம போகலாம். அதனால இந்த கேஸ் நடக்கட்டும், அவனே நடத்தட்டும்.” என நிசாவும் சொல்ல,

“ம்ச்… நிசா பீ சீரியஸ், நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சாதான், என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட் மீ…” என்ற ரவிக்கு,

“ஏன்? எதுக்கு சொல்லணும்? உங்க ஃப்ரண்ட அலார்ட்டாக்கணும்னு யோசிக்கிறீங்களா? நோ… நான் என்ன நினைச்சாலும் யோசிச்சாலும் யாருக்கும் சொல்லப் போறது இல்ல. ஏன், நான் சொல்லாம விட்டா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டீங்களா?” என்று கத்தினாள் நிசப்தி.

“நிசா, போதும் ப்ளீஸ்… நீ கேட்காமலே உனக்கு எல்லாமே நான் செஞ்சாகணும். அதுக்கு நான் கடமைப்பட்டுருக்கேன்…” என்று ரவி பேசிக் கொண்டிருக்கும் போதே,

“ஏன், உங்க தங்கச்சி செஞ்ச பாவத்துக்கான பரிகாரத்தை நீங்க செய்றீங்களா?” என நிசா பட்டென்று கேட்க, ரவியின் பேச்சு அப்படியே நின்றுவிட்டது.

பின் ஒரு முடிவுடன், “நிசா ப்ளீஸ்… ஸ்வாதி பத்தி நான் எப்பவும் பேச விரும்பல, அதுவும் உங்கிட்ட கண்டிப்பா பேசவேக்கூடாது. கொலை செஞ்சிட்டு அந்த பொணத்துக்கிட்ட மன்னிப்பு கேட்குறதுக்கு சமம் அது. அதை நான் செய்யவே மாட்டேன். உனக்கு அது எந்தமாதிரி வலிக்கும்னு எனக்கு தெரியும். அன்ட் உனக்கு செய்ய அவ மட்டும் காரணம் இல்ல, விக்ரம்! அவன் வாழ்க்கையை சீராக்க வேண்டிய பெரிய பொறுப்பு எனக்கு இருக்கு…” என முடிக்கும் முன்னே,

“ஷட்டப்! ஜஸ்ட் ஷட்டப்!” என ஆங்காரமாய் கத்தியவள், “விக்ரம், ஸ்வாதி… விக்ரம், ஸ்வாதி… ஐ ஹேட் தட் அன்ஸ்க்ருபுலஸ் பீபிள். நான் இப்படி இருக்க இவங்க மட்டும் தான் காரணம், ரைட்!” என மேலும் மேலும் கத்த, அப்போதுதான் ரவிக்கும் தான் செய்த முட்டாள்தனம் புரிய, ‘ஓ… மை காட்!’ எனத் தலையில் அடித்துக் கொண்டான்.

பின், “சாரி… சாரி… ரியலி வெரி சாரி நிசாம்மா, ப்ளீஸ் காம் டவுன்… ப்ளீஸ்… நான் இனி எப்பவும் அவங்களைப் பத்தி பேச மாட்டேன். ப்ளீஸ்… நீ டென்சன் ஆகாத நிசாம்மா…” என கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான்.

“அந்த விக்ரம் அவனை என்னால எதுவும் பண்ண முடியல. எல்லாம் அவன் இஷ்டம். அவன் இஷ்டத்துக்கு நடக்குற என்னையே எனக்குப் பிடிக்கல, ஐ ஹேட் மை செல்ஃப். எனக்கு அவனை எதாச்சும் பண்ணணும், எஸ் செய்யணும். நான் எப்படி யாருமே இல்லாம அனாதையா நிக்கிறேனோ, அதே போல அவனும் நிக்கணும், நிக்க வைப்பேன்.” என ஆங்காரம் கொஞ்சம் கூட குறையாமல் பேசிக்கொண்டே போக, அவளை நிறுத்துவதற்கான வழிதான் தெரியவில்லை ரவிக்கு.

ஏதேதோ பேசி, கத்தி தன் கோபம் மொத்தத்தையும் கொட்டிவிட்டு, அமைதியாக சில நிமிடங்கள் ஆனது நிசாவுக்கு. சில வருட கோபம், ஆதங்கம், ஆற்றாமை எல்லாம் இப்போது அவளிடமிருந்து வெளியே வந்தது அவனுக்குப் புரிந்தது. அதுவரை அவள் பேசுவதை பொறுமையாக காது கொடுத்து கேட்டவன், “ஆர் யூ ஓகே நிசாம்மா?” என மென்மையாக கேட்க,

“ஸாரி…” என்றாள் பெண்.

“இட்ஸ் ஓகே! நீ ஒன்னும் நடக்காததை பேசல, இப்போ நாம அதைப்பத்தி பேச வேண்டாம். நான் உனக்கு என்ன செய்யணும்?” என்றவனிடம்,

“இல்ல, ஒன்னும் வேண்டாம்.” என்றாள் நிசா பட்டென்று.

“ம்ச்… நிசா நான்தான் சொன்னேனே, இனி அவங்களைப்பத்தி எப்பவும் உங்கிட்ட பேசமாட்டேன், ப்ராமிஸ்! ப்ளீஸ்… நீ என்னை ஒதுக்கிடாத, இதுதான் ஃபர்ஸ்ட் டைம் நீயா எனக்கு கால் பண்ணிருக்க. நான் எவ்ளோ ஹேப்பி தெரியுமா?” என்ற ரவியின் குரலில் இருந்த கரகரப்பு, நிசாவிற்கும் அழுகையை வர வைத்தது.

“இந்த கேஸ் நானே எடுத்துக்கலாம்னு இருக்கேன், என்ன ஃபார்மாலிடி?” அவளுக்கேத் தெரிந்தாலும், ரவிக்கு சொல்ல வேண்டுமே என்று, போனா போகுது என சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தாள்.

“பார் கவுன்சில்ல மெம்பர் ஆகிருக்கணும், நீ இன்னும் மெம்பர் ஆகலதானே…?” என இழுக்க,

“ஊப்ஸ்… இப்போ என்ன பண்ண?” என முணுமுணுக்க,

“நீயே சொல்லு, எப்படியும் நீ யோசிச்சி வச்சிருப்ப.” என்ற ரவியிடம்,

“நரேன்கிட்ட இதை கொடுக்க முடியாது. அது எல்லாருக்கும் தேவையில்லாத மனஸ்தாபம் வரும். ஏற்கனவே என்னாலதான் அவங்க லைஃப் இப்படி இருக்கு…” என தனக்குத்தானே பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவளிடம், என்ன சொல்வது என தெரியவில்லை ரவிக்கு.

“நிசாம்மா உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா? இருந்தா, இந்த கேஸ் பத்தின பிரச்சனையை எங்கிட்ட விட்டுடு, நான் பார்த்துக்குறேன். உனக்கு செய்யணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனா நீ எப்பவும் என்னை செய்யவிட்டது இல்ல. இப்போ எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, அதை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உனக்காக நான் எல்லா வகையிலயும் உதவ ரெடியா இருக்கேன். பட், இது வேற… விக்ரம் பத்தி தெரிஞ்சதாலதான் நான் இவ்வளவு பேசுறேன். நீ என்ன செய்ய போறனு எனக்கு தெரிஞ்சாதான் இது சரியா, தப்பா, வேற எப்படி மூவ் பண்ணலாம்னு நான் யோசிக்க முடியும்.” என நீளமாக பேசியவனிடம்,

“இப்போவரை ஒரு ஐடியாவும் இல்ல, இனிமேல்தான் யோசிக்கணும், யோசிச்சிட்டு சொல்றேன்.” என்றவள், வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றி பேசிவிட்டு வைத்தாள்.

பிறகு ரேணுகாவிற்கு அழைத்து, அவள் வருவதைப் பற்றிக் கூற, நிசாவின் இந்த உடனடி மாற்றத்தில் ரேணுகாவிற்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.

“நிஜமாவா நிசாம்மா… நிஜமாவா?” என மீண்டும் மீண்டும் கேட்க, நிசப்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஆமாம் ரேணும்மா…” என்றவள், ரவியிடம் பேசியது பற்றி சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

அப்போது விக்ரமும் நரேனும் வீட்டில்தான் இருந்தனர். அவர்களுக்கும் நிசாவின் இந்த உடனடி மாற்றம் சற்று நெருடலாக இருந்தது. ஆனாலும் இங்குதானே வருகிறாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான் விக்ரம்.

ஆனால் நரேனுக்குத்தான் அப்படி விட மனமில்லை. அவள் எப்படியும் தன்னிடம்தான் வருவாள் என்று நினைக்க, ரவியிடம் பேசியது மனதை மிகவும் வருத்தியது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக நின்றிருந்தான்.

நரேனின் சுனக்கத்தை உணர்ந்த விக்ரம் அவன் தோளில் தட்டி, “முதல்ல அவ இங்க வரட்டும்டா, அப்புறம் அவக்கிட்ட பொறுமையா கேளு. நிசாவும் பாப்பாவும் இங்க வர்றதுதான் முக்கியம், நமக்கு இனி நேரமும் இல்ல.” என நிதர்சனத்தை எடுத்து சொல்ல, “ம்ம்…” என்று பெருமூச்சுடன் தலையசைத்தான் நரேன்.

“சியரப் மேன்! இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாளோ தெரியாது. இதுக்கே நீ அப்செட் ஆனா எப்படி? உங்க பிரச்சனையை நீ அவக்கிட்ட சொல்லாதது கூட, இந்த கோபத்துக்கு காரணமா இருக்கலாம். விடு, பார்த்துக்கலாம்.” என்ற விக்ரம்,

“நரேன், கமல் இருக்குற இடத்தை உன் பொண்டாட்டிக்கு சொல்லிடு. துப்பறியும் சாம்பு என்ன பண்ணுதுனு பார்க்கலாம்.” எனச் சிரிக்க,

“ஒய் பாஸ்? இன்வெஸ்டிகேசன் பண்றேன்னு அட்வென்சர் பண்ணிட்டு இருக்கா. இவக்கூடவே என்னால சுத்திட்டு இருக்க முடியுமா? ஷெர்லக் ஹோம்ஸ்னு நினைப்பு…” எனச் சலித்தபடியே சொல்ல, விக்ரமும் ரேணுகாவும் சிரித்து விட்டனர்.

“ஹா… ஹா… விடுடா, அப்படியாச்சும் அவ மைன்ட் டைவர்ட் ஆகுதுல்ல. இல்ல, புதுசா ஒரு பிரச்சனையோட வந்து நிப்பா. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.” என விக்ரம் சிரித்தபடியே சொல்ல,

“எல்லாம் நேரம்தான்… அவ கெட்டுப் போக நீங்கதான் காரணம்.” என சலித்தவன், “ம்மா, அவளைக் கூப்பிட்டு கொஞ்சம் அட்வைஸ் பண்ணா என்ன? நான் இன்னும் எவ்ளோ நாள் இப்படி சுத்திட்டு இருக்குறது? இவருக்குத்தான் அக்கறை, சக்கரைனு ஒன்னும் இல்ல, உங்களுக்குமா இல்ல? இருக்குற பிரச்சனையில இவ ஒரு பக்கம் லென்ஸ தூக்கிட்டு இன்வெஸ்டிகேஷன் பண்றேன்னு கிளம்பிடுறா.” என ரேணுகாவிடம் புலம்ப,

“எனக்கும் ஆசைதான் தம்பி… ஆனா பாரு, இந்த நிசா பொண்ணுதான் அவளே வந்து உஷாகிட்டயும் உங்கிட்டயும் பேசுறேன்னு சொல்லிட்டா. என் நிசா பொண்ணுக்கு இருக்குற பொறுப்பும் அறிவும், இங்க யாருக்கு இருக்கு, சொல்லு? அதனாலதான் நான் இதுல தலையிடல.” என நரேனை வார,

“எதே… அவ சரி பண்றாளா? அப்போ அந்த சூனியக்காரி ஏதோ ப்ளான் பண்ணிட்டா போல பாஸ். எனக்கே இந்த நிலைமைனா, உங்க நிலைமையை யோசிச்சுக்கோங்க. நானெல்லாம் கால்ல விழுந்து கதறி கூட தப்பிச்சுடுவேன், நீங்க என்ன செய்வீங்க?” எனக் கிண்டலடிக்க, “டேய்…!” என விக்ரம் பல்லைக் கடிக்க, இருவரையும் பார்த்து மனம் விட்டு சிரித்தார் ரேணுகா.

***

“விக்கி, இப்போ ஏன் நாம உடனே இந்தியா போகணும் சொல்ற?” என பதட்டமாக ஸ்வாதி கேட்க,

“நான் எதிர்பார்த்து காத்திருந்த டைம் வந்துடுச்சு. இனி ஒளிஞ்சி மறைஞ்சி அந்த விக்ரமை எதிர்க்க வேண்டாம். நேருக்கு நேர் நின்னு அவனை போடணும், அதுக்கான டைம் வந்துடுச்சு. அவர் டைம் ஸ்டார்ட் நவ்…!” என்ற, விக்னேஷின் முகத்தில் தெரிந்த குரோதத்தில் ஸ்வாதியே அரண்டுதான் போயிருந்தாள்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 18, 2026 - 6:10 pm

ஆக மொத்தம், விக்ரமை பழி வாங்கத்தான் நிசப்தியும் கிளம்பி வராப் போலயிருக்கு. அதேநேரத்துல விக்கியும் ஸ்வாதியும் கூட நிசப்தியையும் விக்ரமையும், குழந்தை தசிராவையும் பழி வாங்க வராங்கன்னு நிசப்திக்குத் தெரியுமா ?

😀😀😀
CRVS (or) CRVS 3797

Reply

Leave a Comment

About Me

Featured